Vi அதிரடி: இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச அன்லிமிடெட் டேட்டா.. டாப் டக்கர் சலுகை..
வோடபோன் ஐடியா (Vi) நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கான புதிய வரம்பற்ற டேட்டா வழங்கல் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் இரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை எந்தவொரு நியாயமான பயன்பாட்டுக் கொள்கை (FUP) கட்டுப்பாடுகள் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் Vi வழங்கும் கூடுதல் நன்மைகள் பற்றிப் பார்க்கலாம்.

தனித்துவமான புதிய டேட்டா சலுகை
மீண்டும், இது Vi நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ஒரு தனித்துவமான டேட்டா சலுகையாகும். இந்த நேரத்தில் வேறு எந்த டெல்கோ நிறுவனமும் அதன் பயனர்களுக்கு இப்படி ஒரு டேட்டா சலுகையை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் செலவு எதுவுமின்றி, வெறும் ரூ .249 திட்டம் அல்லது அதற்கு மேல் உள்ள எந்தவொரு ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் ஒவ்வொரு பயனருக்கும் இந்த வரம்பற்ற டேட்டா நன்மை வழங்கப்படும்.

நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை
நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை, Vi பயனர்கள் எந்த தடையும் இல்லாமல் வரம்பற்ற தரவின் பயனை அனுபவிக்கலாம். தகுதியான பயனர்களுக்கு 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகையும் கிடைக்கிறது என்பதை மறக்கவேண்டாம். எனவே இந்த லாபகரமான சலுகை பயனர்களுக்கு ஒரு கூடுதல் போனஸாகும். ஏனெனில், இப்போது பயனர்கள் வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் உடன் போனஸ் டேட்டா இரண்டையும் அனுபவிக்கலாம் என்பது மிகவும் லாபமான நன்மையாகும்.

அதிகரிக்கும் இரவு டேட்டா பிங்கிங்
OTT உள்ளடக்கத்திற்கான தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது, இதனால், இரவு டேட்டா பிங்கிங் மிகவும் பொதுவானதாகிவிட்டது என்று வி நிறுவனம் கூறியுள்ளது. இதனால், அதன் பயனர்கள் இரவுகளில் உள்ளடக்கத்தைத் தடையின்றி பார்க்க உதவுவதற்காக, நிறுவனம் அவர்களுக்கு அதிவேக வரம்பற்ற டேட்டாவை இந்த வழியில் வழங்குகிறது. இந்த சலுகையுடன் சேர்த்து, Vi இப்போது பயனர்களுக்கு மூன்று தனித்துவமான சலுகைகளை வழங்கி வருகிறது.

Vi வழங்கும் மூன்று சிறந்த நன்மைகள்
Vi வழங்கும் முதலாவது நன்மை 'இரட்டை தரவு சலுகை' ஆகும். இதன் கீழ் பயனர்களுக்கு வழக்கமாக கிடைக்கும் டேட்டா அளவு டபுள் ஆகி இரட்டை FUP டேட்டாவைப் பெறுகிறார்கள். இரண்டாவது நன்மையாக 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகை கிடைக்கிறது. இதன் கீழ் பயனர்கள் பயன்படுத்தப்படாத எல்லா தரவையும் வார இறுதி நாட்களில் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்றாவது நன்மையாக 'மிட்நைட் 12 முதல் காலை 6 மணி வரை' பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திகொல்லாம்.

புதிய பயனர்களை ஈர்க்க முடியுமா?
வோடபோன் ஐடியா நிறுவனம் இப்படி ஒரு சலுகையை அறிவித்துள்ள நிலையில், Vi அதன் பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுமா அல்லது இந்த தனித்துவமான சலுகைகளுடன் இன்னும் பல புதிய பயனர்களை நிறுவனம் ஈர்க்க முடியுமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும், இரவு நேரத்தில் அன்லிமிடெட் டேட்டா இலவசமாகக் கிடைத்தால் வேண்டாம் என்றா சொல்லப்போகிறோம்.


Click it and Unblock the Notifications