Home
News

2025-க்கு கும்பிடு.. இனிமே 24 மணி நேரம்.. அன்லிமிடெட் டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 365 ரூபாய்க்கு வெச்சாச்சு!

2025ஆம் ஆண்டுக்கு கும்பிடு போடும்படி வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு இனிமேல் 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. புதிய 13 ப்ரீபெய்ட் திட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களுடன் கிடைக்கிறது. வாய்ஸ் கால்களை எப்படி 24 மணி நேரமும் அன்லிமிடெட் சலுகையில் பயன்படுத்துகிறோமோ அப்படியே இனிமேல் டேட்டாவையும் அன்லிமிடெட் சலுகையில் பயன்படுத்த முடியும். இந்த விஐ நான்ஸ்டாப் ஹீரோ திட்டங்களின் (Vi Nonstop Hero Plans) விவரங்களை இப்போது பார்க்கலாம்.

முதலாவது ப்ரீபெய்ட் திட்டம் ரூ.365 விலையில் தொடங்குகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 24 மணி நேரமும் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) சலுகை கொடுக்கப்படும். மேலும், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டியை கொடுக்கிறது. அடுத்து ரூ.379 விலையில் திட்டம் இருக்கிறது.

2025-க்கு கும்பிடு.. இனிமே 24 மணி நேரம்.. அன்லிமிடெட் டேட்டா.. விஐ!

இதிலும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. இந்த விஐ நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்துக்கு ஒரு மாத வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அடுத்து ரூ.449 விலையில் ப்ரீபெய்ட் திட்டம் கிடைக்கிறது. இதில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் போக ஓடிடி சந்தா கிடைக்கிறது.

ஆகவே, விஐ மூவிஸ் மற்றும் டிவி ( Vi Movies And TV) சந்தாவை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்த ரூ.649 விலைக்கு விஐ நான்ஸ்டாப் ஹீரோ திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 56 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

இந்த திட்டத்துக்கு விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா கிடைக்காது. அடுத்ததாக ரூ.979 விலைக்கு திட்டம் வருகிறது. இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மேலும், விஐ மூவிஸ் மற்றும் டிவி சந்தா மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இந்த நான்ஸ்டாப் ஹீரோ திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ரூ.469 விலைக்கு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தாவுடன் ஒரு திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் ஓடிடி சந்தா போக அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை கொடுக்கப்படுகிறது. 28 நாட்களுக்கு வேலிடிட்டி வருகிறது, ஆனால், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா 3 மாதங்களுக்கு பயன்படுத்த கிடைக்கிறது.

அடுத்து ரூ.994 விலையில் விஐ நான்ஸ்டாப் ஹீரோ திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகிறது. மேலும், 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 3 மாதங்களுக்கு டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. அடுத்து ரூ.996 விலைக்கு திட்டம் கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஆனால், மாற்றாக அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) இதில் கொடுக்கப்படுகிறது. இதை 90 நாட்களுக்கு பெற்று கொள்ளலாம். இதற்கு அடுத்து 70 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.1198 திட்டம் கிடைக்கிறது. இதில் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா கொடுக்கப்படுகிறது.

மேலும், அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. அடுத்து ரூ.407 மதிப்பிலான திட்டம் இருக்கிறது. இதில் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் சன்நெக்ஸ்ட் சந்தா கிடைக்கிறது. சோனிலிவ் சந்தாவுடன் ரூ.408 திட்டம் இருக்கிறது. 28 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, 100 எஸ்எம்எஸ் வருகிறது.

அடுத்து ரூ.997 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியும் சன்நெக்ஸ்ட் சந்தாவும் வருகிறது. மேலும், ரூ.998 திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியும் சோனிலிவ் சந்தாவும் வருகிறது. டேட்டா, வாய்ஸ், 100 எஸ்எம்எஸ் பொதுவாக கிடைக்கிறது. இப்போதைக்கு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers Unlimited Data Plans For 24 Hours Price Starts Rs 365 Check Nonstop Hero Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X