"விஐ தந்திரம்"- ஜியோவைவிட கூடுதல் சலுகை வழங்கும் விஐ!

|

அனைத்து தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு குரலழைப்பு, கூடுதல் டேட்டா சலுகையோடு ஓடிடி அணுகலையும் வழங்குகின்றன. நிறுவனங்களின் அறிவிப்பு வாடிக்கையாளர்களும் பூர்த்தி அடைந்து வருகின்றன.

நிறுவனங்கள் வழங்கும் பல்வேறு திட்டங்களில் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறிப்பிடத்தக்க ஒன்று. வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஷிப்பிங் ப்ரீபெய்ட் திட்டங்கள் நடுத்தர பிரிவுகள் விலையில் கிடைக்கின்றன. அனைத்து திட்டங்களிலும் பெரும்பாலான திட்டங்கள் அதிக விலையில் இருப்பவை அல்ல.

ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் அனைத்து நன்மைகளையும் ரூ.599 மற்றும் விஐ ரூ.699 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் சிறந்த தொகுப்பை வழங்குகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்ட் பேக் ரூ.599:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.599 திட்டத்தில் பயனர்களுக்கு மாதத்திற்கு 100 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது டேட்டா நுகர்வுக்கு பின் பயனர்கள் 1ஜிபி தரவுக்கு ரூ.10 செலுத்த வேண்டும். பயனர் இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டா ரோல்ஓவர் வசதியும் கிடைக்கிறது.

இது தினசரி 100 எஸ்எம்எஸ்களையும்30 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பும் அடங்குகிறது. அதுமட்டுமின்றி கூடுதலாக நெட்பிளிக்ஸ், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் போன்ற உள்ளடக்க நன்மைகளையும் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் பேக் ரூ.699

இந்தியாவை பொறுத்தவரை மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டராக வோடபோன் ஐடியா ரூ.699 விலையில் திட்டத்தை வழஹ்குகிறது. இது நியாயமான பயன்பாட்டு கொள்கை (எஃப்யூபி) வரம்பில்லா பயனர் வரம்பற்ற தரவை பெறுகிறார்கள். அதோடு விஐ வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. கூடுதலாக இந்த பேக் பிரைம் மியூசிக், வூட் செலக்ட், சன் என்எக்ஸ்டி, விஐ மூவிஸ் & டிவி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் விஐபி, அமேசான் பிரைம் வீடியோ உள்ளிட்ட பல்வேறு ஓடிடி அணுகலை வழங்குகிறது.

ரிலையன்ஸ் ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டம் மற்றும் வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் திட்டம்

எந்த வித தடையும் இல்லாமல் பயனருக்கு வரம்பற்ற டேட்டா வழங்குவதால் வோடபோன் ஐடியா பேக் தெளிவான வெற்றியாளராகவே கருதப்படுகிறது. காரணம், ஜியோ பேக் ஒவ்வொரு மாதமும் 100 ஜிபி டேட்டாவ வழங்குகிறது.

மறுபுறம் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு ஆபரேட்டராக இருப்பது ரிலையன்ஸ் ஜியோ ஓடிடி பயன்பாடுகளுக்கு அணுகலை வழங்குவதில் முன்னணியில் இருக்கிறது. இந்த நிறுவனம் நெட்பிளிக்ஸ் உள்ளடக்கத்தை திட்டத்தோடு வழங்குகிறது. அதேபோல் விஐ பயன்பாட்டில் நன்மைகள் இல்லை. தற்போதைய காலக்கட்டத்தில் ஓடிடி பயன்பாடு பிரதானமாக மாறிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ திட்டம் ரூ.599 விலையில் பயனர்கள் அளவிலான டேட்டாக்களை அனுபவிக்க முடியும். அதேசமயத்தில் நீங்கள் அதிக தரவு டேட்டா பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கு விஐ வழங்கும் திட்டமே சரியானதாக இருக்கும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers More data than Jio's these Postpaid plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X