Just In
- 4 hrs ago
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- 5 hrs ago
வெறும் 15 ரூபாய் NFC ஸ்டிக்கர் இத்தனை வேலையை செய்யுமா? வீட்டயே ஸ்மார்ட்டாக மாற்றலாமா?
- 5 hrs ago
உங்களிடம் பழைய போன் இருக்கிறதா? தூசித் தட்டி எடுக்க நேரம் வந்துருச்சு! விஷயம் தெரியுமா?
- 6 hrs ago
iPhone 15 சீரீஸ்: மொத்தம் 4 மாடல்கள்.. அனைத்திலுமே "இந்த" அம்சம் இருக்கும்.. என்னது அது?
Don't Miss
- News
கொலை மிரட்டல்.. பயமா இருக்கு.. அதிமுக நிர்வாகி மீது புகார் கொடுத்த திமுக எம்.எல்.ஏ.. அதிரடி ஆக்ஷன்!
- Movies
AK 62 அப்டேட்: விக்கிக்காக சமரசம் பேசினாரா நயன்..? ஆனாலும் லைகா கொடுத்த ரெட் சிக்னல்
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
Vodafone idea பயனர்களே: இனி எல்லாருக்கும் Disney+ Hotstar இலவசம்- ஆக்டிவேட் செய்வது எப்படி?
தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டமும் பலவிதமான சலுகைகள் மற்றும் வெவ்வேறு விதமான நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கிறது. அதன்படி தற்போது வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் தனது பெரும்பாலான ரீசார்ஜ் திட்டங்களில் பிரதான ஓடிடி அணுகலை வழங்குகிறது.

பிரதான ஓடிடி பயன்பாடு இனி இலவசம்
Vodafone Idea தனது 7 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் பிரதான ஓடிடி பயன்பாடான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகலை இலவசமாக அறிவித்து இருக்கிறது. இந்த ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் குறித்துப் பார்க்கையில், ரூ.151, ரூ.399, ரூ.499, ரூ.601, ரூ.901, ரூ.1066 மற்றும் ரூ.3099 ஆகும். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அடிப்படை திட்டமான ரூ.151 இல் டிஸ்னி+ ஹாட்ஸ்டார், Vi Movies & TV விஐபி அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.151 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.151 ரீசார்ஜ் திட்டமானது பேசிக் பிளானாகும். இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் 8 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. கூடுதலாக இந்த ரீசார்ஜ் திட்டத்தில் 3 மாத சந்தா இலவசமாக Disney+ Hotstar க்கு வழங்கப்படுகிறது. கூடுதலாக வேறு எந்த பலனும் இந்த திட்டத்தில் கிடையாது.

வோடபோன் ஐடியா ரூ.399 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.399 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டமானது ரூ.151 திட்டம் போலில்லாமல் வரம்பற்ற டாக் டைம் நன்மையை வழங்குகிறது.
அதோடு தினசரி 2.5 ஜிபி டேட்டா உடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்திலும் 3 மாதத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது

டேட்டா ரோல் ஓவர், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுகல் இலவசம்
இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் குறித்துப் பார்க்கையில், இதில் எவ்வித டேட்டா கட்டுப்பாடும் இல்லாமல் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை பயன்படுத்தலாம். அதேபோல் டேட்டா ரோல் ஓவர் நன்மையும் வழங்கப்படுகிறது.
இதன்மூலம் திங்கள் - வெள்ளி வரை பயன்படுத்தாமல் இருக்கும் டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம். Vi Movies & TV அணுகலுக்கான விஐபி சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.499 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.499 ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில், இதில் வரம்பற்ற டாக்டைம் மற்றும் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இந்த திட்டத்திலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்தவித வரம்புமின்றி டேட்டாவை பயன்படுத்தலாம். Vi Movies & TV க்கான இலவச சந்தா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
கூடுதலாக இந்த திட்டத்தில் ஒரு வருடத்துக்கான Disney+ Hotstar க்கான இலவச சந்தா அணுகலும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் டேட்டா ரோல் ஓவர் நன்மையும் கிடைக்கிறது. இதன்மூலம் வார நாட்களில் பயன்படுத்தாத டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தலாம்.

வோடபோன் ஐடியா ரூ.601 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.601 ரீசார்ஜ் திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் கிடைக்கிறது. அதோடு தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.
கூடுதலாக இந்த திட்டத்தில் 1 வருடத்திற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இலவசமாக வழங்கப்படுகிறது. இதிலும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எவ்வித வரம்பும் இன்றி டேட்டாவை பயன்படுத்தலாம்.
Vi TV & Moviesக்கான VIP அணுகல் இலவசமாக வழங்கப்படுகிறது. இதிலும் டேட்டா ரோல் ஓவர் நன்மை கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ.901 திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.901 ரீசார்ஜ் திட்டமானது 70 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் இலவச எஸ்டிடி மற்றும் உள்ளூர் அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா உடன் 1 வருடத்துக்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா அணுகல் இலவசமாக கிடைக்கிறது. முந்தைய திட்டங்களில் குறிப்பிட்டது போல் வரம்பற்ற இரவு நேர டேட்டா இதிலும் உள்ளது. விஐ மூவிஸ் மற்றும் டிவிக்கான விஐபி அணுகலை இலவசமாக பெறலாம்.

வோடபோன் ஐடியா ரூ.1066 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.1066 திட்டமானது 84 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகள் வழங்கப்படுகிறது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டாருக்கான இலவச சந்தா அணுகல் 1 வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. முந்தைய திட்டங்களில் குறிப்பிட்டது போல் ரேட்டா ரோல் ஓவர், இரவு நேர வரம்பற்ற டேட்டா உட்பட Vi Movies & TVக்கான இலவச விஐபி அணுகல் என அனைத்தும் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.3099 ரீசார்ஜ் திட்டம்
வோடபோன் ஐடியா ரூ.3099 ரீசார்ஜ் திட்டமானது 365 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இது வருடாந்திர திட்டமாகும். இந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படுகிறது.
1 வருடத்துக்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் Vi Movies & TV க்கான விஐபி அணுகல் இதில் உள்ளது. முந்தைய ரீசார்ஜ் திட்டங்களில் குறிப்பிட்டது போல் அனைத்து நன்மைகளும் ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470