Home
News

ரீசார்ஜ் மட்டும் போதும் ஐபிஎல் 2021 இலவசமாக பார்க்கலாம்: வரம்பற்ற டேட்டாவுடன் VI அறிமுகம் செய்த திட்டங்கள்!

ஐபிஎல் போட்டி வருடம் வருடம் நடந்து வருகிறது. அதேபோல் சமீபத்தில் நடக்க இருக்கும் 2021 ஐபிஎல் போட்டி இந்தாண்டு விரைவில் நடப்பது போல் தோன்றுகிறது. காரணம் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் கொரோனா காரணமாக தாமதமாத நடைபெற்றதே ஆகும். இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான ஏலம் முடிவடைந்து அதற்கான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

நடைபெற இருக்கும் ஐபிஎல் 2021 போட்டி

நடைபெற இருக்கும் ஐபிஎல் 2021 போட்டி

ஐபிஎல் போட்டி நடைபெறும் நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வரும் நிலையில் கிரிக்கெட் ஆர்வலர்கள் மத்தியில் அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதை நேரலையில் பார்ப்பதற்கான அணுகலும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டு கொண்டு வழங்கி வருகின்றன.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஐபிஎல் நேரலை

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஐபிஎல் நேரலை

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஐபிஎல் நேரலையை தொகுத்து வழங்குகிறது. குறுகிய காலத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் பணம் செலுத்தும் உறுப்பினர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. காரணம் புதுத் திரைப்படம், ஐபிஎல் நேரலை, குக் வித் கோமாளி போன்ற நேரடி அணுகலே ஆகும். அதன்படி ஐபிஎல் நேரலையை ஹாட்ஸ்டார் தொகுத்து வழங்க இருக்கும் நிலையில் அதன் அணுகலை பல்வேறு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்குகின்றன.

ஐபிஎல் 2021 லைவ் ஸ்ட்ரீமிங்

ஐபிஎல் 2021 லைவ் ஸ்ட்ரீமிங்

ஐபிஎல் 2021 லைவ் ஸ்ட்ரீமிங்கை விஐ தனது ரீசார்ஜ் திட்டங்களுடன் வழங்குகிறது. இந்த தகவல் பல்வேறு ஐபிஎல் ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. வோடபோன் ஐடியா தற்போது ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க இருக்கும் ஐபிஎல் தொடரை தடையற்ற அனுபவத்துடன் வழங்க ஆறு புதிய திட்டங்களை வழங்குகிறது.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் விஐ ரீசார்ஜ் திட்டங்கள்

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உடன் விஐ ரீசார்ஜ் திட்டங்கள்

வோடபோன் ஐடியா (விஐ) புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. ஐபிஎல் லீக்கின் மைய ஆதரவுகளுக்கான அணுகலை முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வழங்குகிறது. டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனமான விஐ தனது சந்தாதாரர்களுக்கு ஐபிஎல் 2021 லைவ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறது. ஐபிஎல் போட்டியானது ரூ.401 முதல் ரூ.801 வரையிலான திட்டங்களை வழங்குகிறது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்களின் சிறப்பம்சங்கள் டிஸ்னி ப்ள்ஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குவதாகும்.

இலவசமாக கிடைக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல்

இலவசமாக கிடைக்கும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகல்

வோடபோன் ஐடியா சந்தாதாரர்களுக்கு ஐபிஎல் 2021 அணுகலோடு உடனான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் சந்தாதாரர் தளத்தை இலவமாக வழங்குகிறது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ஓராண்டு இலவச புதிய விஐபி உறுப்பினர்களுடனான டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலை வழங்குகிறது. வோடபோன் ஐடியா இந்த திட்டத்தில் 720 பிக்சல் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை வழங்குகிறது. வரம்பற்ற லைவ் ஸ்போட்ஸ், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் உள்ளிட்ட அனுபவத்தை வழங்குகிறது.

விஐ ரீசார்ஜ் திட்ட விவரங்கள்

விஐ ரீசார்ஜ் திட்ட விவரங்கள்

வோடபோன் ஐடியா (விஐ) ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.401 விலையில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் அணுகலோடு கிடைக்கிறது. இது வரம்பற்ற அழைப்பு, 100 ஜிபி 4ஜி டேட்டா உடன் 16ஜிபி கூடுதல் இணைய சேவையை வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். அதேபோல் ரூ.601 விலைக்கு கிடைக்கும் திட்டங்கள் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் 200ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இதில் 32ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது 56 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

வரம்பற்ற குரலழைப்பு, இணைய சேவை

வரம்பற்ற குரலழைப்பு, இணைய சேவை

அதேபோல் ரூ.501 ரீசார்ஜ் திட்ட சலுகைகள் குறித்து பார்க்கையில், இது வரம்பற்ற குரழைப்பை வழங்குகிறது. சிறப்பம்சம் என்னவென்றால் வரம்பற்ற இணைய சேவை இதில் கிடைக்கிறது. இந்த திட்டம் 56 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. அதேபோல் ரூ.801 ரீசார்ஜ் திட்டம் குறித்து பார்க்கையில் இந்த திட்டம் 300 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers Free Access to Watching IPL 2021 Matches: Disney+ Hotstar Recharge Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X