Home
News

Vodafone Idea-வை செக்கென்ட் SIM ஆக யூஸ் பண்றவங்க மட்டும் இதை படிங்க.. 99 ரூபாயாம்.. என்னது?

வி (Vi) என்கிற வோடாபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் சிம் கார்டு உங்களிடம் உள்ளதென்றால்.. ஆனால் அதை நீங்கள் மெயின் சிம் ஆக பயன்படுத்தவில்லை, மாறாக செக்கெண்ட் சிம் கார்டு (Second SIM Card) ஆக பயன்படுத்தி கொண்டிருக்கிறீர்கள் என்றால்.. தாராளமாக தொடர்ந்து படிக்கலாம். மெயின் சிம் ஆக பயன்படுத்துபவர்களுக்கு படிக்கலாம்.. ஆனால் என்ன மனம் கொஞ்சம் புண்படும்!

இந்தியாவில் உள்ள 3 முக்கிய தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான வோடபோன் ஐடியா சில அற்புதமான சிம் வேலிடிட்டி திட்டங்களை (SIM Validity Plans) வழங்குகிறது. அவைகள் வெறும் ரூ.99 முதல் தொடங்குகிறது. ஆனால் அவைகளில் ஒன்றுகூட - இங்கே (தமிழ்நாட்டில், தென் இந்தியாவில் கிடைக்கவில்லை.. மாறாக எல்லாமே வட இந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது, அங்கும் கூட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது!

Vodafone Idea-வை செக்கென்ட் SIM ஆக யூஸ் பண்றவங்க மட்டும் இதை படிங்க!

ஆனால் இங்கே வோடாபோன் ஐடியா சிம் கார்ட்டை ஆக்டிவ் ஆக வைக்கும் பேஸிக் பிளான் ரூ.189 முதல் தொடங்குகிறது. அதுவும் ரூ.189 ஆனது 26 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் தான் வருகிறது. ஆனால் சில வட இந்திய வட்டங்களில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் ரூ.99 காம்போ பிளான் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ரூ.99-ஐ போலவே ரூ.107, ரூ.111 மற்றும் ரூ.279 ஆகிய மலிவான காம்போ வேலிடிட்டி பேக்குகளும் ரீசார்ஜ் செய்ய "அங்கே" கிடைக்கின்றன. இந்த திட்டங்கள்- அசாம், பீகார், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், வடகிழக்கு மற்றும் ஒடிசா போன்ற வட்டங்களில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

வி ரூ.99 காம்போ வேலிடிட்டி பேக்கின் நன்மைகள்: இது வோடபோன் ஐடியாவின் ஆரம்ப நிலை காம்போ பேக் ஆகும். இது ரூ.99 டால்க் டைம், 200 எம்பி டேட்டா ஆகிய நன்மைகளை 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணங்கள் பொருந்தும்.

வி ரூ.107 காம்போ வேலிடிட்டி பேக்கின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் இந்த காம்போ பேக் ரூ.107 டால்க் டைம், 200 எம்பி டேட்டா ஆகிய நன்மைகளை 30 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணங்கள் பொருந்தும்.

வி ரூ.111 காம்போ வேலிடிட்டி பேக்கின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் இந்த காம்போ பேக் ரூ.111 டால்க் டைம், 200 எம்பி டேட்டா ஆகிய நன்மைகளை 1 மாதம் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணங்கள் பொருந்தும்.

வி ரூ.279 காம்போ வேலிடிட்டி பேக்கின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் இந்த காம்போ பேக் ரூ.279 டால்க் டைம், 500 எம்பி டேட்டா ஆகிய நன்மைகளை 1 மாதம் என்கிற சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் வழங்குகிறது. உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளுக்கு வினாடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஸ்டாண்டர்ட் எஸ்எம்எஸ்களுக்கும் கட்டணங்கள் பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers Cheapest Combo Plans Price Starts From Just Rs 99 in Selected Circles
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X