கூடுதல் டேட்டா நன்மையை வழங்கும் வோடபோன் ஐடியா.! எந்த திட்டத்தில் தெரியுமா?
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து சிறப்பான திட்டங்களை அறிமுகம் செய்துவருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ரூ.1499 திட்டத்தை தேர்வு செய்யும் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு கூடுதலாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்கத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இப்போது அறிவிக்கப்பட்ட கூடுதல் டேட்டா சலுகையின் கீழ் இந்த திட்டத்தில் பயனர்கள் மொத்தம் 74ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவைப் பெறுவார்கள். இதுதவிர 3,600 இலவச எஸ்எம்எஸ்கள், வரம்பற்ற வாய்ஸ் கால்கள் மற்றும் வீ மூவிஸ் மற்றும் டிவி ஆப்பிற்கான இலவச அணுகலையும் வழங்குகிறது இந்த ரூ.1499 திட்டம். குறிப்பாக இதன் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும்.

அண்மையில் ஒன்லி டெக் வலைதளம் வெளியிட்டுள்ள தகவலின்படி, வி ஆப்பின் மூலம் மட்டுமே, அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுகளுக்கு மட்டுமே இந்த கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. ஆனாலும் சில பயனர்கள் வி நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய சலுகை குறித்து எஸ்எம்எஸ் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வி ஆப் வழியாக கூட இந்த சலுகை தெரிவிக்கப்படுவதாக சில வாடிக்கையாளர்கள் ட்வீட் செய்துள்ளனர்.

இந்தியாவில் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் பிரதானமாக இருப்பது ஜியோ, வோடபோன் ஐடியா, ஏர்டெல், பிஎஸ்என்எல் உள்ளிட்டவைகள் ஆகும். ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்கும் திட்டங்களின் விலை மாறுபாட்டைவிட இணைய வேகத்தில் அதிக மாறுபாடு உள்ளது என்றே கூறலாம்.
இதுகுறித்து கடந்த அக்டோபர் மாத கடைசியில் ஓக்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் இணைய வேகம் மாறுபடுகிறது. நாட்டின் மொபைல் நெட்வொர்க்குகளின் சராசரி பதிவிறக்க வேகம் ஆண்டுக்கு ஆண்டு 11.6 சதவீதம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் ஓக்லா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மூன்றாம் காலாண்டின் கணக்கீட்டில் Vi 13.74Mbps பதிவிறக்க வேகத்தையும் 6.19Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஏர்டெல் 13.58Mbps பதிவிறக்க வேகத்தையும் 4.15Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது. ஜியோ 9.71Mbps பதிவிறக்க வேகத்தையும் 3.41Mbps பதிவேற்ற வேகத்தையும் கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
நாட்டில் வேகமாக 4ஜி தரவு வழங்கும் இடத்தில் விஐ இருந்தாலும் நாட்டின் பெரும்பாலான இடங்களில் 4ஜி சேவை கிடைக்கும் நெட்வொர்க் பட்டியலில் ஜியோ முதலிடத்தில் இருக்கிறது. 2020 மூன்றாம் காலாண்டின் பட்டியலில் இந்தியாவின் சிறந்த 4ஜி சேவை வழங்குனர்களில் ஜியோ 99.7 சதவீதமாக முதலிடத்தில் இருக்கிறது. ஏர்டெல் ஜியோவுடன் மிக நெருக்கமாக 98.7 சதவீதத்தை கொண்டிருக்கிறது. இதில் விஐ 91.1 சதவீதம் மட்டுமே பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் இணைய வளர்ச்சியில் ஜியோ பங்கு பிரதானமானவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications