Home
News

ஆக.31 கடைசி.. Vi சிம் கார்டு இருக்கா.. இனிமே 90 நாட்களுக்கு இலவச டேட்டா.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணுங்க.. இல்லனா?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கு இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகையை பெறுவதற்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. இதில் 180 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான வேலிடிட்டி திட்டங்கள் இருக்கின்றன. ஆகவே, எப்படி இந்த டேட்டாவை பெறுவது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

ஹீரோ அன்லிமிடெட் திட்டங்களில் (Hero Unlimited Plans) இந்த இலவச டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகிறது. 90 நாட்களுக்கு வழங்கப்படுவதால், ஆகஸ்ட் 31ஆம் தேதியே கடைசி நாளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதை டெலிகாம்டாக் உறுதி செய்திருக்கிறது. முதலில் 180 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டத்தில் இருந்து பார்க்கலாம்.

ஆக.31 கடைசி.. Vi சிம் கார்டு இருக்கா.. இனி 90 நாட்களுக்கு இலவச டேட்டா!

வோடபோன் ஐடியா ரூ 1749 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 30 ஜிபி இலவச டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு 45 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது.

நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கிறது. இலவச டேட்டா மற்றும் தினசரி டேட்டா போக, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட் (Data Delight) மற்றும் அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இதற்கு 180 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 3499 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 50 ஜிபி டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு மட்டும் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், இந்த திட்டத்தின் சலுகைகளுக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. முந்தைய திட்டத்தில் பார்த்த வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் மற்றும் பிஞ்ச் ஆல் நைட் டேட்டா (Binge All Night) டேட்டா சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது.

வோடபோன் ஐடியா ரூ 3699 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3699 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 50 ஜிபி இலவச டேட்டா மற்றும் அதற்கு 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அதில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையை கொடுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது.

அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் கொடுக்கிறது. இந்த திட்டத்தில் கூடுதலாக ஓடிடி சந்தா சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை பெற்று கொள்ளலாம். மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட்ஸ் போன்ற சலுகைகள் இந்த வருடாந்திர திட்டத்துக்கும் கொடுக்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா ரூ 3799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3799 Plan Details): இந்த திட்டத்துக்கு முந்தைய திட்டத்தில் கிடைத்த அனைத்து சலுகைகளும் கிடைக்கின்றன. அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தா மட்டும் மாறுபடுகிறது. 50 ஜிபி இலவச டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் இதர டேட்டா சலுகைகள் வருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers 50GB Extra Data For Rs 3499 Plan Rs 3699 Plan Rs 3799 Check Plan List
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X