Vodafone-Idea: ரூ.299 விலையில் 112 ஜிபி டேட்டா வேண்டுமா? அப்போ இதுதான் உங்களுக்கான சிறந்த திட்டம்!
வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி, வெறும் ரூ. 300 செலவில் 100 ஜிபி-க்கு மேல் டேட்டா கிடைக்கும் திட்டத்தை நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. சரியாக சொன்னால் கீழே குறிப்பிட்டுள்ள திட்டத்தின் படி உங்களுக்கு 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் 112 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தின் முழு விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா இப்போது புதிய VI பிராண்டாக மாறியுள்ளது. மேலும் வோடபோன் ஐடியா நிறுவனம் பல புதிய திட்டங்களையும் புதிய மாற்றங்களையும் தற்பொழுது அறிமுகம் செய்த வண்ணமாக இருக்கிறது. VI திட்டத்தின் கீழ் கிடைக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றிய தகவலை விரிவாக பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா VI ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியாவின், இந்த ரூ.299 பிரேபியட் திட்டத்தின் கீழ் பயனருக்கு தினமும் 4 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கிறது. இத்துடன் அனைத்து நெட்வொர்க்கிற்கான வரம்பற்ற வாய்ஸ் கால் அழைப்பு நன்மையையும், தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையையும் இந்த திட்டம் வழங்குகிறது.

இந்த வோடபோன் ஐடியா திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. வெறும் ரூ. 299 என்ற குறைவான விலையில் 28 நாட்களுக்கு தினமும் 4 ஜிபி டேட்டா என்ற விதத்தில் ஒட்டுமொத்தமாக பயனருக்கு 112ஜிபி டேட்டா நன்மையை இத்திட்டம் வழங்குகிறது.

வோடபோனுக்கு போட்டியாக ஏர்டெல் நிறுவனத்திலும் இந்த விலையில் ஒரு திட்டம் இருக்கிறது, ஏர்டெல் நிறுவனம் அதன் பட்டியலில் ரூ. 298 என்ற ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கிவருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனருக்கு தினமும் 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கபடுகிறது. இத்திட்டத்தில் அனைத்து நெட்வொர்க் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் அழைப்பு நன்மை வழங்கபடுகிறது.

இத்தட்டுடன் ஒவ்வொரு நாளும் இலவச 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. கூடுதலாக இந்த திட்டத்துடன் ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் நன்மையையும் வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் நமையின் கீழ் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், இலவச ஹெலோட்டூன்ஸ், விங்க் மியூசிக், ஷா அகாடமியின் ஓராண்டு இலவச ஆன்லைன் பாடநெறி மற்றும் ஃபாஸ்டாக் வாங்கும்போது ரூ.150 கேஷ்பே போன்று பல நன்மைகள் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications