Home
News

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்.. கண்ணை மூடி வழங்கிய Vodafone.. ஜியோ கூட!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தினாலும், கஸ்டமர்களுக்கு உரிய நேரத்தில் சலுகைகளை கொடுப்பதற்கு துளியும் தயங்குவது கிடையாது. இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு (Prepaid Customers) 7 நாட்களுக்கு இலவச டேட்டா சலுகையையும், போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு (Postpaid Customers) 10 நாட்கள் பில் நீட்டிப்பு சலுகையையும் கொடுத்துள்ளது. இந்த சலுகைள் குறித்த முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வயநாட்டில் இருக்கும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு இந்த சலுகைகள் கொடுக்கப்படுகிறது. கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித தடையும் இன்றி சேவைகளை கொடுக்க இந்த முடிவை வோடபோன் ஐடியா நிறுவனம் எடுத்துள்ளது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு என்ன சலுகைகள் என்பதை வரிசையைக பார்ப்போம்.

பழச மறந்துடுங்க.. 7 நாட்களுக்கு இலவசம்.. மொபைலுக்கு தானாக ரீசார்ஜ்!

வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் நன்மைகள் (Vodafone Idea Prepaid Customers Benefit): வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 1 ஜிபி டேட்டா வீதம் 7 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த டேட்டா சலுகையானது, ஆட்டோ-கிரெடிட் செய்யப்படும். ஆகவே, கிளைம் செய்ய வேண்டியது கிடையாது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கணக்கிடப்படுகிறது.

வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் கஸ்டமர்கள் நன்மைகள் (Vodafone Idea Postpaid Customers Benefit): வோடபோன் ஐடியா போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கான சலுகைகளை பார்க்கையில், அவர்களது பில் டேட் 10 நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது. இதன் மூலம் அடுத்த 10 நாட்களுக்குள் உங்களது பில் டேட் இருந்தாலும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.

அதேபோல கேரளாவில் இருக்கும் அனைத்து வோடபோன் ஐடியா ஸ்டோர்களும் நிவாரணப் பொருட்களுக்கான சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ளது. ஆகவே, வயநாட்டின் நிவாரணப் பணிகளுக்கு ஆதரவளிக்க விரும்பும் பொதுமக்கள் எந்தவொரு வோடபோன் ஐடியா ஸ்டோர்களுக்கும் சென்று அத்தியாவசியப் பொருட்களை நன்கொடையாக வழங்கலாம்.

இவ்வாறு வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல முன்னதாக ஏர்டெல் நிறுவனமும் அறிவித்தது. ஆகவே, வயநாட்டில் இருக்கும் ஏர்டெல் ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 1 ஜிபி டேட்டா இலவசமாக, 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlmited Voice Calls) சலுகைகளை வழங்கியுள்ளது.

இருப்பினும் 3 நாட்களுக்கு மட்டுமே சலுகையை கொடுத்துள்ளது. வேலிடிட்டி முடிந்த கஸ்டமர்களுக்கும் இந்த சலுகையை கொடுக்கிறது. இந்த சலுகைகளை பெறவும் கிளைம் செய்ய வேண்டியது கிடையாது. ஆட்டோ கிரெடிட் செய்யப்படுகிறது. இதேபோல ஏர்டெல் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கும் சலுகைககள் இருக்கிறது.

ஆகவே, ஏர்டெல் போஸ்ட்பெய்டு கஸ்டமர்களுக்கு பில் செலுத்தும் காலக்கெடுவானது 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் ஸ்டோர்கள் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையங்களாக பயன்படுத்தப்படுகின்றன. ஆகவே, கேரளாவில் இருக்கும் ஏர்டெல் ஸ்டோர்களிலும் வயநாடு நிவாரணப் பணிகளுக்கு பொருட்களை கொடுத்து அனுப்பலாம்.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொறுத்தவரையில், வயநாட்டில் இருக்கும் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு இலவச சலுகைகளை அறிவிக்கவில்லை. இருப்பினும், வயநாட்டில் தனது நெட்வொர்க் திறனை மேம்படுத்தியுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நிவாரணப் பணிகள் மற்றும் போக்குவரத்து நெரிசலை நிர்வகிப்பதற்கான கூடுதல் ஆதரவை அளித்துள்ளது.

மாநில பேரிடர் மேலாண்மை குழுவுக்கு தடையில்லா மற்றும் கூடுதல் நெட்வொர்க் ஆதரவை வழங்குவதற்காக இரண்டாவது பிரத்யேக கோபுரத்தையும் அங்கு நிறுவி இருக்கிறது. இவ்வாறு முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது உதவிகளை கொடுத்துள்ளது. கஸ்டமர்களுக்கு ஈக்கட்டான நேரத்தில் உதவியை வழங்கி நன்மதிப்பை பெற்றுள்ளது.

மேலும், மத்திய தொலைத்தொடர்பு துறையின் கீழ் செயல்படும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் வயநாட்டில் சேவைகளை மேம்படுத்தி இருக்கிறது. இலவச வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை கொடுக்கிறது. அதே நேரத்தில் வயநாட்டில் 4ஜி சேவையும் கொடுத்து கஸ்டமர்களுக்கு உதவி இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offers 1 GB Free Data Per Day For 7 Days For Wayanad Prepaid Customers After Airtel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X