இதையும் மாத்திட்டாங்களா? இனி ரூ.249 திட்டத்தில் இந்த நன்மைகள் தான் கிடைக்கும்.. கூடுதல் டேட்டா என்னாச்சு?

|

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் முக்கிய முன்னணி நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய அனைத்து நிறுவனங்களும் அதன் டேரிஃப் பிளான்களின் விலையை அதிகரித்துள்ளன. முதன் முதலில் இந்த விலை அதிகரிப்பை ஏர்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் அதன் திட்டங்களின் விலையை அதிகரித்தது. பின்னர் இதனைத் தொடர்ந்து நேற்று முதல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் அதன் விலையை அதிகரித்துள்ளது.

விலையை அதிகரித்த வோடபோன் ஐடியா நிறுவனம்

விலையை அதிகரித்த வோடபோன் ஐடியா நிறுவனம்

Vodafone Idea (Vi) நிறுவனம் சமீபத்தில் அதன் ப்ரீபெய்ட் திட்டங்களை புதிய அதிகரித்த கட்டணங்களுடன் புதுப்பித்து வருகிறது. வோடபோன் ஐடியாவின் அனைத்து ப்ரீபெய்ட் திட்டங்களும் விலை உயர்வைப் பெறவில்லை என்றாலும், வோடபோன் ஐடியா இது வரை வழங்கி வந்த மிகவும் பிரபலமானவைகளில் பெரும்பாலானவை இப்போது விலை அதிகரிப்பைப் பெற்றுள்ளது. இது நிறையப் பயனர்கள் விரும்புவதை விட அதிக விலை கொண்டுள்ளது. ஆனால் ஒரு திட்டத்தின் விலை எல்லாம் மாறவில்லை. வோடபோன் ஐடியா இன்னும் ரூ.249 திட்டத்தை வழங்குகிறது. ஆனால் பல்வேறு நன்மைகளுடன் மற்றம் செய்யப்பட்டுள்ளது.

'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' இனி கிடையாதா?

'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' இனி கிடையாதா?

முன்னதாக, Vodafone Idea (Vi) பயனர்களுக்கு 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' சலுகைகளை நிறுவனத்தின் சில பிரபலமான திட்டங்களுடன் வழங்கப்பட்டது. அதில் மிகவும் பிரபலமான அடிப்படை திட்டம் தான் வோடபோன் ஐடியாவின் ரூ. 249 திட்டம். ஆனால் இனி அப்படிச் செயல்படாது என்று நிறுவனம் கூறியுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனம் முந்தைய ரூ. 249 திட்டத்தின் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, இப்போது இது ரூ. 299 விலைக்குக் கிடைக்கும். புதிய ரூ. 249 திட்டம் குறுகிய கால பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட எளிய தினசரி டேட்டா திட்டமாகும்.

நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..நான்கு காலுடன் கிடைத்த 'பாம்பு' படிமம்.. இது டிராகனா இல்லை பல்லியா? 5 ஆண்டாக நீடிக்கும் குழப்பம்..

வோடபோன் ஐடியா புதிய ரூ.249 திட்டம்

வோடபோன் ஐடியா புதிய ரூ.249 திட்டம்

Vodafone Idea (Vi) வழங்கும் இந்த திட்டமானது அதன் பயனர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டா, தினமும் 100 SMS நன்மை மற்றும் 21 நாட்கள் சேவை செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. புதிய ரூ. 249 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ. 249 விலை திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து பயனர்களுக்கும் Vi Movies & TV Basic சேவைக்கான அணுகலும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்த திட்டத்துடன் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' சலுகைகள் கிடைக்காது.

இதற்கு முன்னர் இந்த திட்டம் என்ன - என்ன நன்மைகளை வழங்கியது?

இதற்கு முன்னர் இந்த திட்டம் என்ன - என்ன நன்மைகளை வழங்கியது?

முன்னதாக, மாற்றப்பட்ட விலை மதிப்பீட்டிற்கு முன்னர், இந்த திட்டம் பயனர்கள் 28 நாட்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை ஆகியவற்றுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா நன்மையை வழங்கியது. மேலும், வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் மற்றும் பிங்கே ஆல் நைட் சலுகைகள் திட்டத்துடன் இணைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' சலுகையில் கீழ் பயனர்கள் வார இறுதியில் அவர்கள் பயன்படுத்தாத டேட்டாவை பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!கடைசியில நீங்களுமா குருநாதா: ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்திய ஜியோ.! கவலையில் பயனர்கள்.!

'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' என்றால் என்ன?

'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' என்றால் என்ன?

அதேபோல், பிங்கே ஆள் நைட் சலுகையில் கீழ் பயனர்களுக்குத் தினமும் நள்ளிரவு முதல் விடியற்காலை வரை அன்லிமிடெட் டேட்டா நன்மை இலவசமாக வழங்கப்பட்டது. இதற்கு முன் எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் இப்படி ஒரு மகத்தான சலுகையை வழங்கியது இல்லை. குறிப்பாக முன்னணியில் மலிவு விலை டேட்டா நன்மையை வழங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கூட இப்படி ஒரு சலுகையை அதன் பயனர்களுக்கு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் பிரபலமடைய என்ன காரணம்?

இந்த திட்டம் பிரபலமடைய என்ன காரணம்?

முன்னதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பட்டியலில் உள்ள இந்த ரூ, 249 விலை திட்டத்தில் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' நன்மைகளை வழங்கியதைத் தொடர்ந்து இது பிரபலமானது. இது Vi இன் ரூ. 249 திட்டத்தை ஒட்டுமொத்த சந்தையிலும் சிறந்த ஒன்றாக ஆக்கியது, ஆனால் இனி நிலைமை அப்படி இருக்க போவது இல்லை. இந்தத் திட்டத்தை வேறு எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் திட்டங்களிலிருந்தும் இப்போது ஒப்பிட முடியாது. முன்னர், இந்த திட்டம் ஜியோவின் அடிப்படை திட்டத்தை விட சிறப்பானது என்று புகழப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..குறைந்த விலையில் சிறந்த பிராட்பேண்ட் திட்டம் வேண்டுமா? அப்போ 'இந்த' திட்டங்களை பாருங்க..

இந்த திட்டத்தின் முந்தைய பயனர்களுக்கு இப்போது வருத்தமா?

இந்த திட்டத்தின் முந்தைய பயனர்களுக்கு இப்போது வருத்தமா?

ஆனால், பயனர்களுக்கு பிடித்தமான கூடுதல் பலன்களை அகற்றியதால், பெரும்பான்மையான பயனர்களுக்கு இந்தத் திட்டத்தை மிகவும் குறைவான கவர்ச்சிகரமானதாக இப்போது நிறுவனம் மாற்றியுள்ளது. இது 21 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது மற்றும் முன்பை போல் அதிக சலுகைகளை வழங்கவில்லை. இதில் குறிப்பிடத்தக்கதாக இப்போது எதுவும் இல்லை என்பது முந்தைய பயனர்களுக்கு வருத்தமளிக்கிறது.

இன்னும் கூடுதல் டேட்டா வழங்குவதை நிறுவனம் நிறுத்தவில்லை

இன்னும் கூடுதல் டேட்டா வழங்குவதை நிறுவனம் நிறுத்தவில்லை

இருப்பினும், வோடபோன் ஐடியாவிடமிருந்து ப்ரீபெய்ட் திட்டங்களை வாங்க ஆர்வமுள்ள பயனர்கள், கூடுதல் பலன்களுடன் கூடிய ரூ. 299 திட்டங்கள் போன்ற மற்ற பல திட்டங்களை பெற்றுப் பயன்பெறலாம். மேலும், இப்போது வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் பயனர்களுக்கு 'டேட்டா டிலைட்ஸ்' எனப்படும் சலுகையை அதன் அதிக மதிப்பிலான திட்டங்களுடன் வழங்குகிறது. இது பயனர்களுக்குக் கூடுதலாக 2 ஜிபி பேக்அப் டேட்டாவை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' மற்றும் 'பிங்கே ஆல் நைட்' சலுகை இல்லையென்றாலும், நிறுவனம் கூடுதல் டேட்டா வழங்குவதை முற்றிலுமாக நிறுத்தவில்லை.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offering New Rs 249 Prepaid Plan With Unexpected Benefits : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X