Home
News

நீங்க Vodafone சிம் வெச்சுருந்த 5GB டேட்டா ஃப்ரீ.. எப்படி பெறுவது?

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து அதிரடி சலுகைகள் மற்றும் திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வரிசையில், வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு (Prepaid Customer) 5ஜிபி (5GB) இலவச டேட்டா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

இந்தியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகிய இரண்டு டெலிகாம் (Telecom) நிறுவனங்களும் 5ஜி சேவையை நாடு முழுவதும் போட்டிப் போட்டுக்கொண்டு வழங்கி வருகின்றன. ஆனால், இவற்றின் போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா (Vodafone Idea) இன்னும் 5ஜி சேவையை வழங்கவில்லை.

நீங்க Vodafone சிம் வெச்சுருந்த 5GB டேட்டா ஃப்ரீ.. எப்படி பெறுவது?

அதுதொடர்பான எந்த அறிவிப்பும் வராததால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் வேறு சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். பலர் ரீசார்ஜ் செய்வதையே மறந்துவிட்டனர் என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில், கடந்தாண்டு தொடக்கத்தில் இருந்தே வோடாபோன் ஐடியா நிறுவனம் 2 கோடி வாடிக்கையாளர்களை இழந்துவிட்டது.

இவர்களை மீண்டும் தன்பக்கம் திருப்ப பல்வேறு அதிரடி சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது வோடபோன் ஐடியா. அப்படி வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் 5ஜிபி இலவச டேட்டா திட்டத்தை அதிரடியாக கொண்டுவந்துள்ளது. இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

வோடபோன் ஐடியா 5ஜிபி டேட்டாவை எப்படி பெறுவது?: இந்த இலவச 5ஜிபி டேட்டாவை (Free 5GB data) பெற வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் விஐ ஆப் (Vi app) மூலம் ரூ.299 -க்கு மேல் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அந்த திட்டத்தின் சலுகைகள் உடன் கூடுதலாக 5ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதனை நீங்கள் 3 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதேபோல ரூ.199 முதல் ரூ.299 வரையில் ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் 2ஜிபி டேட்டா (2GB data) இலவசமாக வழங்கப்படும். இதையும் 3 நாட்களுக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மஹா ரீசார்ஜ் திட்டம் (Maha recharge Scheme) என்னும் புதிய திட்டத்தின் கீழ் இந்த சலுகை வழங்கப்படுகிறது.

முன்னதாக, வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வந்தது. இந்த திட்டம் தினசரி டேட்டாவை அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமாக இருக்கிறது. அந்த வகையில், ரூ.368 மற்றும் ரூ.369 திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 60ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது.

அதாவது, ஒரு நாளைக்கு 2ஜிபி என்ற கணக்கில் 30 நாட்களுக்கு பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது. இதோடு 100 எஸ்எம்எஸ் மற்றும் விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) சலுகைகளும் கிடைக்கின்றன. இதில் ரூ.368 திட்டம், சன் நெக்ஸ்ட் (Sun NXT) ஒடிடி தளத்தில் இலவசமாக மூவிஸ்களை பார்த்துக்கொள்ளும் சலுகையையும், ரூ. 369 ரூபாய் திட்டம், சோனி லிவ் (SonyLiv) ஒடிடி தளத்தில் மூவிஸ்களை பார்த்துக்கொள்ளும் சலுகையையும் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea offering free 5GB data on all prepaid customers who priced above Rs 299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X