Vi ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 மீது டபுள் டேட்டா ஆஃபர்.. தினமும் 4ஜிபி கிடைக்கும் திட்டமும் உண்டு..
வோடபோன் ஐடியா இப்போது ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 ஆகிய ப்ரீபெய்ட் திட்டங்களில் இரட்டை தரவு சலுகையான டபுள் டேட்டா நன்மையைத் தனது பயனர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டங்கள் இப்போது அதன் பயனர்களுக்குத் தினமும் 3 ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களும் பொதுவாகத் தினமும் 1.5 ஜிபி 4 ஜி டேட்டாவை வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று திட்டங்களின் வேலிடிட்டி விபரம்
ரூ. 249 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடனும், ரூ 399 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடனும், ரூ .599 திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடனும் வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் வரம்பற்ற அழைப்பு மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகின்றது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 அணுகலையும் நிறுவனம் வழங்குகிறது.

தினமும் 4 ஜிபி டேட்டா
அதேபோல், வோடபோன் ஐடியா தினமும் 4 ஜிபி டேட்டா கிடைக்கும் டபுள் டேட்டா நன்மை கொண்ட திட்டங்களையும் தன் வசம் வைத்துள்ளது. வோடபோன் ஐடியா ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ.699 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் தனது பயனர்களுக்குத் தினமும் இரட்டை தரவு சலுகை நன்மையுடன் 4ஜிபி 4ஜி டேட்டாவை தொடர்ந்து வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Vi அறிமுகப்படுத்திய 'பிங் ஆல் நைட்' திட்டம்
Vi சமீபத்தில் 'பிங் ஆல் நைட்' திட்டத்தை அறிமுகப்படுத்தியது, இதன் கீழ் நிறுவனம் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி, கூடுதல் செலவில்லாமல், வரம்பற்ற அதிவேக இரவு நேர டேட்டாவை அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நள்ளிரவு 12:00 மணி முதல் அதிகாலை 6:00 மணி வரை அனைத்து Vi வரம்பற்ற ரீசார்ஜ்களிலும் வழங்குகிறது. குறிப்பாக ரூ. 249 மதிப்பிலான திட்டங்களுக்கு மேல் உள்ள திட்டங்களுக்கு இந்த நன்மை கிடைக்கும்.

அன்லிமிடெட் டவுன்லோட்
வரம்பற்ற அதிவேக இரவு நேரத் டேட்டாவை Vi வாடிக்கையாளர்கள் பல்வேறு OTT பயன்பாடுகளிலிருந்தும், Vi மூவிஸ் மற்றும் டிவி பயன்பாட்டிலிருந்தும் பல்வேறு உள்ளடக்கங்களை உலவவும் மற்றும் பதிவிறக்கச் செய்யவும் பயன்படுத்தலாம். Vi தற்பொழுது டெல்லியில் வைஃபை அழைப்பை வழங்கத் தொடங்கியுள்ளது. வீ வழங்கும் வைஃபை அழைப்பு சேவை தற்போது ஒன்பிளஸ் மற்றும் சியோமியின் ஸ்மார்ட்போன்களுடன் இணக்கமாக உள்ளது.

விரைவில் அனைத்து வட்டங்களிலும்
மேலே குறிப்பிட்டுள்ள ரூ. 249, ரூ. 399 மற்றும் ரூ. 599 மூன்று திட்டங்களும் தற்போது செயலில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்கள் மட்டுமே கிடைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் நன்மை இப்போது ஹைதராபாத் (ஆந்திரா மற்றும் தெலுங்கானா வட்டம்), மற்றும் பெங்களூரு நகரம் (கர்நாடக வட்டம்) ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. விரைவில் அனைத்து வட்டங்களிலும் இந்த திட்டங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications