வோடபோனுக்கு தாராள மனசு.. கம்மி விலை திட்டத்தில் எக்ஸ்ட்ரா டேட்டா.. இன்பதிர்ச்சியில் பயனர்கள்.!
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கு வகையில் அவ்வப்போது சூப்பர் சலுகைகளை வழங்கி வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். அதேபோல் கம்மி விலையில் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களையும் வழங்கி வருகிறது இந்த வோடபோன் நிறுவனம்.
இந்நிலையில் பயனர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கும் வகையில் ஒரு அசத்தலான சலுகையை கம்மி விலை திட்டத்தில் வழங்கி உள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம். அதாவது இந்நிறுவனம் ரூ.75 திட்டத்தில் தான் எக்ஸ்ட்ரா டேட்டா சலுகையை வழங்கி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.75 திட்டம் (Vodafone Idea Rs 75 Plan) ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 6ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. பின்பு இந்த திட்டம் ஆனது 7 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் தற்போது இந்த திட்டம் 1.5ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விஐ மொபைல் ஆப் (Vi mobile app) மூலம் ரீசார்ஜ் செய்தால் தான் இந்த எக்ஸ்ட்ரா டேட்டா நன்மை கிடைக்கும்
ஆனால் இந்த வோடபோன் ஐடியா ரூ.75 திட்டம் ஆனது அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்காது. குறிப்பாக இது டேட்டா வவுச்சர் திட்டம் என்பதால், பேஸ் ப்ரீபெய்ட் திட்டம் (Base Prepaid Plan) ஆக்டிவாக இருக்க வேண்டும். குறிப்பாக இந்த டேட்டா வவுச்சர் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் இந்தியாவில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி சேவை வழங்கிவிட்டன. குறிப்பாக இந்நிறுவனங்களின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
அதாவது சமீபத்தில் வெளியான தகவலின்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் தனது 5ஜி சேவை அறு அல்லது ஏழு மாதங்களுக்குள் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர வோடபோன் ஐடியா நிறுவனம் வரும் 2025-க்குள் நாடு முழுவதும் 3ஜி சேவையை நிறுத்தும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனத்தின் 5ஜி சேவை இந்தியா முழுவதும் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் கம்மி பட்ஜெட்டில் இந்நிறுவனம் வழங்கும் அசத்தலான இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு மாதம் ஆகும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, VI மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த வோடபோன் ஐடியா ரூ.319 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா ரூ.369 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். வரம்பற்ற அழைப்பு நன்மைகள், SonyLiv சந்தா, தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, VI மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியாவின் ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம்.


Click it and Unblock the Notifications








