Home
News

இரண்டு திட்டங்களுக்கு 75ஜிபி வரை எக்ஸ்ட்ரா டேட்டா நன்மையை வழங்கிய வோடபோன் ஐடியா.!

வோடபோன் ஐடியா நிறுவனம் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களும் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

 கூடுதல் டேட்டா நன்மை

கூடுதல் டேட்டா நன்மை

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு அட்டகாசமான திட்டங்களுக்கு கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. அதாவது எக்ஸ்ட்ரா டேட்டாவை இரண்டு திட்டங்களுக்கு வழங்கியுள்ளது.

இரண்டு திட்டங்கள்

இரண்டு திட்டங்கள்

தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.1449 மற்றும் ரூ.2889 ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு தான் கூடுதல் டேட்டா நன்மையை வழங்கியுள்ளது. இப்போது இந்த திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 180 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.1449 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது கூடுதலாக 50ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டுள்ளது. மேலும் Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்ததிட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

வோடபோன் ஐடியா ரூ.2889 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.2889 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.2889 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.2889 ப்ரீபெய்ட் திட்டத்தில் தற்போது கூடுதலாக 75ஜிபி டேட்டா நன்மை வழங்கப்பட்டுள்ளது. மேலும் Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்ததிட்டத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இப்போது பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மையை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற சில நன்மைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற
அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea offered additional data benefit for two prepaid plans: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X