Home
News

Vodafone-க்கு இறக்கியாச்சு.. மாசம் ரூ.300 கூட இல்ல.. ரூ.291-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி.. வாய்ஸ் கால்கள்!

முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனத்தை தூக்கி சாப்பிடும்படியான விலைக்கு 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் போன்ற கூடுதல் சலுகைகளை வோடபோன் ஐடியா (Vodafone Idea) களமிறக்கி இறுக்கிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் முதல் தினசரி டேட்டா வரையில் ஒட்டுமொத்த சலுகைகளும் வருடம் முழுவதும் கொடுக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ஒரு வருட திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனம் 5ஜி சேவைகளை கொடுக்கவில்லை. ஆகவே, இந்த சலுகைகளை பதிலாக கூடுதல் டேட்டா சலுகைகளை லாபம் பார்க்காமல் கொடுக்கிறது. பிஞ்ச் ஆல் நைட் (Binge All Night) டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) மற்றும் டேட்டா டிலைட் (Data Delight) சலுகைகள் இதில் அடங்கும். இவற்றுடன் இந்த வருடாந்திர திட்டம் கிடைக்கிறது.

Vodafone-க்கு இறக்கியாச்சு.. மாசம் ரூ.300 கூட இல்ல.. ரூ.291க்கு வருது!

வோடபோன் ஐடியா ரூ 3499 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3499 Plan Details): வோடபோன் ஐடியாவில் ஆரம்ப விலைக்கு தினசரி டேட்டா கொண்ட திட்டமாக இந்த வருடாந்திர திட்டம் (Yearly Plan) இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) வோடபோன் கஸ்டமர்களுக்கு டேட்டா சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன. அதாவது, வழக்கமான தினசரி டேட்டா 1.5 ஜிபி கொடுக்கப்படுகிறது.

இந்த 1.5 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டெய்லி கோட்டா (Post Daily Quota) டேட்டாவை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா சலுகைகள் போக நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா (Unlimited Data) சலுகை கொடுக்கப்படும். பிஞ்ச் ஆல் நைட் டேட்டா மூலம் இந்த சலுகை கிடைக்கிறது.

மேலும், தினசரிக்கு கொடுக்கப்படும் 1.5 ஜிபி டேட்டாவில் மீதம் இருக்கும் டேட்டாவானது, காலாவதியாகாது. அது வர இறுதி நாட்களில் பயன்படுத்தி கொள்ள கொடுக்கப்படும். ஆகவே, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மூலம் இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ள முடியும். இதன் மூலம் திட்டத்தின் டேட்டாவை வீணாக்காமல் பயன்படுத்தி கொள்ள முடிகிறது.

இப்படி டேட்டா சலுகைகளில் மிரள விடுகிறது, இந்த வருடாந்திர திட்டம். இந்த சலுகைகள் போக வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, டேட்டாவை போல தினசரி 100 லிமிட்டில் எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதுபோக ட்ரூலி அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Truly Unlimited Voice Calls) சலுகை கிடைக்கிறது.

அன்லிமிடெட் லோக்கல் கால்கள் (Unlimited Local Calls) முதல் எஸ்டிடி கால்கள் (STD Calls) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இந்த அனைத்து சலுகைகளையும் 365 நாட்கள் வேலிடிட்டியில் பயன்படுத்தி கொள்ளலாம். இதைவிட அதிக டேட்டா சலுகை வேண்டுமானால் மற்றொரு ஒரு வருட திட்டம் இருக்கிறது.

இந்த திட்டம் ரூ.3,599 விலையில் கிடைக்கிறது. அதாவது முந்தைய திட்டத்தைவிட ரூ.100 கூடுதல் விலைக்கு கிடைக்கிறது. இந்த விலையில் தினசரி 2 ஜிபி டேட்டா வீதம் 365 நாட்களுக்கும் கொடுக்கிறது. இந்த திட்டத்தின் மற்ற சலுகைகளை பார்க்கையில் முதலில் பார்த்த திட்டத்தை போலவே கிடைக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

அதேபோல பிஞ்ச் ஆல் நைட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் மற்றும் டேட்டா டிலைட் சலுகைகளும் இந்த திட்டத்துக்கு பொருந்தும். இந்த 2 திட்டங்களிலும் டேட்டா டிலைட் சலுகை மூலம் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால், இந்த டேட்டாவை பேக்கப் டேட்டாவாக மட்டுமே பயன்படுத்த முடியும். ஆகவே, விஐ ஆப் மூலம் கிளைம் செய்ய வேண்டும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offer Unlimited Voice Calls Daily Data 100 SMS 365 Days Validity At 3499 One Year Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X