Home
News

பேஸிக் ரீசார்ஜ் பண்ணாலே 3 மாதங்களுக்கு இலவசம்.. ஆபர்னா இப்படி இருக்கணும்.. Vodafone SIM யூஸர்கள் காட்டில் மழை!

வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இப்போது தனது பயனர்களுக்கு இலவச 'ஸ்பாடிஃபை பிரீமியம்' (Spotify Premium) சந்தாவை வழங்குகிறது. இலவச ஸ்பாடிஃபை பிரீமியம் என்பது பயனர்களுக்கு நிச்சயமாக ஒரு சிறந்த மதிப்பை அளிக்கும் சலுகையாகும்.

தெரியாதவர்களுக்காக ஸ்பாடிஃபை என்பது உலகளவில் பிரபலமான ஒரு ம்யூசிக் ஸ்ட்ரீமிங் தளமாகும், இது பயனர்கள் "ஆன் தி கோ"வில் (அதாவது எங்கு வேண்டுமானாலும்) இசையை கேட்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த ஆப்பின் இலவச பதிப்பை பயன்படுத்தும்போது பயனர்கள் தொடர்ந்து விளம்பரங்களை கேட்க வேண்டியிருக்கும். ஆனால் இனி அந்த நிலை இருக்காது.

பேஸிக் ரீசார்ஜ் பண்ணாலே 3 மாதங்களுக்கு இலவசம்!

பிரீமியம் சந்தா மூலம், பயனர்கள் விளம்பரங்களை தவிர்க்கலாம் மற்றும் ஆஃப்லைனில் கேட்பதற்காக இசையை பதிவிறக்கமும் செய்யலாம். இப்போது, ​​வோடபோன் ஐடியா தனது குறிப்பிட்ட சில மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த சந்தாவை இலவசமாக வழங்கவுள்ளது. மாணவர்களுக்கு ஸ்பாடிஃபை பிரீமியத்தின் விலை மாதத்திற்கு ரூ.69 ஆகவும், மற்றவர்களுக்கு மாதத்திற்கு ரூ.139 ஆகவும் உள்ளது. அப்படியானால், வோடபோன் ஐடியா என்ன அறிவித்துள்ளது மற்றும் எந்தெந்த வாடிக்கையாளர்களுக்கு இது இலவசமாக கிடைக்கும்? இதோ விவரங்கள்:

குறிப்பிட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்பாடிஃபை பிரீமியத்தை வழங்கவுள்ள வோடபோன் ஐடியா: வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெய்ட் (Postpaid) மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஸ்பாடிஃபை பிரீமியம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஸ்பாடிஃபை மேற்கொள்ளும் இத்தகைய முதல் கூட்டணி இதுவாகும்.

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய நிறுவனங்களும் கூட ம்யூசிக் ஸ்ட்ரீமிங் சந்தாக்களை (பிரீமியம் வகையை சேர்ந்தவை) தங்கள் திட்டங்களுடன் வழங்குகின்றன. ஜியோ தனது திட்டங்களுடன் ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தாவை வழங்குகிறது. அதே சமயம் ஏர்டெல் அதன் பயனர்களுக்கு ஆப்பிள் ம்யூசிக் (Apple Music) சந்தாவை வழங்குகிறது.

இத்தகைய சந்தாக்கள் நுகர்வோருக்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன. ஸ்பாடிஃபை பிரீமியம் மூலம், பயனர்கள் இசையை ஆஃப்லைனில் பதிவிறக்கம் செய்து கேட்கலாம் மற்றும் உயர்தர ஆடியோ ஸ்ட்ரீமிங் வசதியையும் பெறலாம். வோடபோன் ஐடியாவின் அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் பயனர்களுக்கு இந்தச் சந்தா வழங்கப்படும்.

வி-யின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மாதத்திற்கு ரூ.451 இல் தொடங்குகின்றன. இந்த திட்டத்திலும் பயனர்களுக்கு இலவச ஸ்பாடிஃபை சந்தா கிடைக்கும். இருப்பினும், இதில் ஒரு முக்கிய விஷயம் உள்ளது. இந்த சந்தா முதல் மூன்று மாதங்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும். மூன்று மாதங்களுக்கு பிறகு, பயனர்களிடமிருந்து மாதத்திற்கு ரூ.139 கட்டணமாக வசூலிக்கப்படும்; இது நுகர்வோருக்கு நிச்சயமாக அவ்வளவாக பிடிக்காத ஒரு விஷயமாக இருக்கலாம். அனால் இந்நிறுவனத்திடம் சில நல்ல விஷயங்களும் உள்ளன.

அதில் ஒன்று தான் ரூ.99 க்கு அன்லிமிடெட் டேட்டா. வி நிறுவனம் தனது அன்லிமிடெட் டேட்டா திட்டத்தை, குறிப்பிட்ட ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தாமல், சிறிய ரீசார்ஜ்கள் மற்றும் டேட்டா வவுச்சர்கள் மூலமாகவும் வழங்கும் வகையில் விரிவுபடுத்தி வருகிறது. இதற்கு ரூ.99 டேட்டா வவுச்சர் (Vi Rs.99 data voucher) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இது குறிப்பிட்ட காலத்திற்கு அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதோடு, ப்ரீபெய்ட் பயனர்களுக்கான டேட்டா பேக்கேஜ்களை வடிவமைப்பதில் வி நிறுவனம் மேற்கொண்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் காட்டுகிறது.

வோடபோன் ஐடியா ரூ.99 டேட்டா வவுச்சரின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.99 ரீசார்ஜ் ஒரு டெய்லி டேட்டா டாப்-அப் வவுச்சர் (Daily data top-up voucher) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் அன்லிமிடெட் டேட்டாவை வழங்குவதுடன், இரண்டு நாட்கள் செல்லுபடியாகும் காலத்தையும் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offer Free Spotify Premium to Postpaid Mobile Customers But there is a Catch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X