Home
News

இதுல நாங்கதான்.. ஒரு நாளுக்கு 4 ஜிபி டேட்டா.. 12AM முதல் 12PM ப்ரீ.. அன்லிமிடெட் டேட்டா.. வாய்ஸ் கால்கள்!

இதுல நாங்கதானு அடித்து சொல்லும்படியான ப்ரீபெய்ட் திட்டத்தை ரூ.539 விலைக்கு வோடபோன் ஐடியா (Vodafone Idea) கொடுக்கிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களிடம் இல்லாத வகையில் நாளொன்றுக்கு 4 ஜிபி டேட்டாவை கொடுப்பது மட்டுமல்லாமல், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை இலவசமாக களமிறக்கி இருக்கிறது. இந்த வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

வோடபோன் ஐடியா 5ஜி (Vodafone Idea 5G) சேவைகள் 17 நகரங்களில் கிடைக்க இருக்கின்றன. சென்னையிலும் கிடைக்க இருக்கிறது. இதனால், அந்த நிறுவனத்தின் கஸ்டமர்கள் குஷியில் இருக்கின்றனர். ஆனால், அதற்கு முன்னதாகவே நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டாவை வோடபோன் ஐடியா கொடுக்க தொடங்கிவிட்டது.

இதுல நாங்கதான்.. ஒரு நாளுக்கு 4 ஜிபி டேட்டா.. 12AM முதல் 12PM ப்ரீ!

இதனால், ஏற்கனவே கிடைத்துவந்த 4 ஜிபி டேட்டா திட்டத்தின் மீது ஒட்டுமொத்த கஸ்டமர்களின் கண்களும் இருக்கின்றன. ஏனென்றால், அதிகப்படியான டேட்டா வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். ஒரு நாளுக்கு 4 ஜிபி டேட்டா கிடைத்தால், வேறு ஆப்ஷன் எதற்கு என்றே தோன்றும். இப்போது, ப்ரீ டேட்டா வேறு வருகிறது.

அதாவது, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு மதியம் 12 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் 4 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதற்கு பிறகு அன்லிமிடெட் நைட் டேட்டா (Unlimited Night Data) சலுகை தொடங்கப்பட்டுவிடும். ஆகவே, திட்டத்தின் டேட்டாவை பயன்படுத்தாமலேயே இலவச நைட் டேட்டாவை (Free Night Data) பெற்று கொள்ளலாம்.

அதே நேரத்தில் 4 ஜிபி டேட்டாவில் பயன்படுத்த முடியாமல் டேட்டா மிஞ்சமாகினால், அதையும் பயன்படுத்தி கொள்ள இந்த திட்டத்தில் சலுகை இருக்கிறது. அதாவது, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை மூலம் திங்கள் முதல் வெள்ளி வரையில் மிஞ்சமான டேட்டாவை, சனி மற்றும் ஞாயிறுகளில் கூடுதலாக பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வளவு டேட்டா சலுகைகளுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கோட்டா கிடைக்கிறது. இதன் மூலம் 4 ஜிபி டேட்டாவை பயன்படுத்தும் நேரத்தில் அதை முழுமையாக பயன்படுத்தி விட்டால், குறைவான வேகத்தில் தொடர்ந்து டேட்டா கிடைக்கும். இதுபோக டேட்டா டிலைட்ஸ் (Data Delights) சலுகை மூலம் அவசரகால டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

இப்போது வரை பார்த்த சலுகைகள் டேட்டாவுக்கு மட்டுமே கிடைத்தவை. ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம். இந்த வோடபோன் ஐடியா திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த வேலிடிட்டி முழுவதும் 100 எஸ்எம்எஸ்களை தினமும் செய்து கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் வரம்பில்லாமல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே, டேட்டாவை போல குறையில்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) வருகின்றன. இந்த அனைத்து சலுகைகளும் ரூ.539 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு 2.5 ஜிபி டேட்டா திட்டம் வேண்டுமானால், ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வரும் மற்றொரு திட்டம் ஆப்ஷனாகும்.

இந்த வோடபோன் ஐடியா திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. மேலும், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் கிடைக்கும் நைட் டேட்டா மற்றும் வீக்கெண்ட் டேட்டா சலுகை கிடைக்கிறது. தினசரி டேட்டா சலுகை 2.5 ஜிபியாக இருக்கிறது. கூடுதலாக ஹாட்ஸ்டார் சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Offer 4GB Daily Data With Unlimited Data From 12AM To 12PM For Rs 539
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X