இப்போவே பண்ணிடுங்க.. மாதாந்திரம் ரூ.149 போதும்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 24ஜிபி டேட்டா!
ஜூன் மாதத்துக்கு பிறகு ரீசார்ஜ் கட்டணங்கள் உயர போவதாக டெலிகாம் வட்டாரங்கள் திட்டவட்டமாக தெரிவிக்கும் நேரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனமானது, மாதம் ரூ.149 கட்டணத்தில் 365 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் கால்கள் மற்றும் 24 ஜிபி டேட்டாவை வழங்கி வருகிறது.
இந்த திட்டத்தை போலவே மற்றொரு வருடாந்திர திட்டத்தில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தின் சந்தா மட்டுமல்லாமல், 50 ஜிபி கூடுதல் டேட்டா (Extra Data) சலுகையும் கிடைக்கிறது. இந்த 2 வருடாந்திர ப்ரீபெய்ட் திட்டங்களின் (Yearly Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ரூ 1799 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 1799 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வருடம் முழுவதும் வாய்ஸ் கால்களுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், டேட்டாவில் சற்று கம்மியான சலுகையே கிடைக்கிறது. ஏனென்றால், இந்த திட்டம் மிகவும் மலிவான விலைக்கு கிடைக்கிறது.
இருப்பினும், எஸ்எம்எஸ் சலுகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு 24 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா (Lump-sum Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவுக்கு தினசரி லிமிட் (Daily Limit) கிடையாது. அதேபோல போஸ்ட் டேட்டா (Post Data) சலுகையும் கொடுக்கப்படவில்லை.
ஆகவே, 24 ஜிபி டேட்டாவை தினசரி லிமிட் இல்லாமல் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், 24 ஜிபிக்கு பிறகு பயன்படுத்தும் ஒவ்வொரு எம்பிக்கும் தலா 50 பைசா செலுத்த வேண்டும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 3,600 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. இதை நாளொன்றுக்கு 100 வீதம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆனால், வாய்ஸ் கால் சலுகையில் எந்தவிட குறைவும் கிடையாது. அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் (Roaming) வாய்ஸ் கால்களை பெறலாம். இந்த திட்டத்துக்கு 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதற்கான மாதாந்திர செலவை கணக்கிட்டால், ரூ 149 மட்டுமே தேவைப்படுகிறது.
ஆகவே, டேட்டா தேவைப்படாமல், வருடம் முழுவதும் எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை மட்டும் போதும் என்று கேட்கும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களுக்கு இந்த மலிவான வருடாந்திர திட்டம் நல்ல சலுகைகளை கொடுக்கும். ஒருவேளை தினசரி டேட்டா மற்றும் ஓடிடி சலுகை வேண்டுமானால், பின்வரும் திட்டம் சரியாக இருக்கும்.
வோடபோன் ஐடியா ரூ 3099 திட்ட விவரங்கள் (Vodafone Idea Rs 3099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகளும் கிடைக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டா தினசரி டேட்டா சலுகை கிடைக்கிறது.
இந்த 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 50 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 780 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். முந்தைய திட்டத்தை போலவே தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகை கிடைக்கிறது.
இந்த திட்டத்தில் ஓடிடி சலுகையும் வருகிறது. ஆகவே, ஒரு வருடத்துக்கான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், பின்ஞ் ஆல் நைட் (Binge All Night) சலுகையின் கீழ் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை அன்லிமிடெட் டேட்டா கொடுக்கப்படுகிறது.
அதேபோல வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover) சலுகை மூலம் வார நாட்களில் மீதம் விட்ட டேட்டாவை வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் சலுகையும், டேட்டா டிலைட் (Data delights) மூலம் ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி பேக்கப் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








