வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது ''உண்டு''..

|

வோடபோன் ஐடியா லிமிடெட் அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குவதை நிறுத்தியுள்ளது. சமீபத்தில் நிறுவனம் வெளியிட்ட தகவல் படி தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் அனைத்து போஸ்ட்பெய்டு திட்டங்களில் ரூ.499 மேல் விலையில் உள்ள திட்டங்களுக்கு டிஸ்னி + Hotstar விஐபி சந்தாவை நிறுவனம் வழங்குகிறது.

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது

ZEE5 பிரீமியம் சந்தா, வழக்கமாக வருடத்திற்கு ரூ. 999 அல்லது மாதத்திற்கு ரூ. 99 என்ற விலையில் கிடைக்கிறது. Vi இதை ரூ. 499 க்கு மேல் விலை கொண்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் இலவசமாக வழங்கு வந்தது. Vi இன் ரூ.399 அடிப்படை போஸ்ட்பெய்ட் திட்டம் Vi மூவிஸ் மற்றும் டிவி தவிர வேறு எந்த OTT சந்தா நன்மையையும் ஒருபோதும் வழங்கவில்லை என்பது இந்த இடத்தில் கவனிக்க வேண்டியது.

தனிப்பட்ட பயனர்களுக்கான Vi போஸ்ட்பெய்ட் திட்டங்கள் 499 ரூபாயிலிருந்து தொடங்குகின்றன, மேலும் குடும்ப பயனர்களுக்கு அவை ரூ. 598 மற்றும் ரூ. 649 இல் தொடங்குகின்றது. வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பின் படி டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் நிறுவனம் அதன் ZEE5 பிரீமியம் சந்தாவை மாற்றியமைத்ததாகத் தெரிகிறது. இதனால் இனி ZEE5 பிரீமியம் கிடைக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது

வோடபோன் ஐடியா ZEE5 பிரீமியம் OTT சந்தா நன்மையை நீக்குகிறது
மேலே குறிப்பிட்டுள்ளபடி, வோடபோன் ஐடியாவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ .499 விலைக்கு மேல் இலவச ZEE5 பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. இருப்பினும், நிறுவனம் இனி இந்த நன்மையை வழங்காது. அதற்குப் பதிலாக, டெல்கோவின் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் ரூ .399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவுடன் வருகின்றது.

இது தவிர, நிறுவனம் உங்களுக்கு அமேசான் பிரைம் சந்தா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா மற்றும் வி மூவிஸ் & டிவி ஆப்ஸ் ஆகியவற்றின் OTT சந்தாக்களுடன் இப்போது Vi RED போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா தனது இணையதளத்தில் ZEE5 பிரீமியம் சந்தாவிற்கான விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் புதுப்பித்துள்ளது. "மேலே குறிப்பிடப்பட்ட ரூ. 499 திட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களில் ZEE5 பிரீமியம் சந்தா 2021 மார்ச் 10ம் தேதி முதல் புதிய சந்தாவிற்குத் திரும்பப் பெறப்படுகிறது."

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது

'புதிய சந்தா' என்ற சொல் இங்கே சற்று குழப்பமாக இருக்கிறது. ZEE என்டர்டெயின்மென்ட் லிமிடெட் உடனான ஒப்பந்தத்தை புதுப்பித்த பின்னர் வரும் நாட்களில் Vi நிறுவனமானது அதன் ZEE5 பிரீமியம் சந்தா நன்மையை மீண்டும் அறிமுகப்படுத்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vi REDX ரூ. 1,099 போஸ்ட்பெய்ட் திட்டம் கூட இப்போது ZEE5 பிரீமியம் நன்மை இல்லாமல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. இது Vi கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதியைக் குறைத்தது போல் தெரிகிறது. காரணம், கடந்த ஆண்டு REDX திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, Vi இதில் அதன் சிறந்த நன்மைகளை மட்டுமே தொடர்ந்து வழங்கும் என்று உறுதியுடன் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த மாற்றம் இப்போது வரவேற்கத்தக்க வகையில் இல்லை என்று பயனர்கள் கருதுகின்றனர்.

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது

ரூ.499 தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை, ஒவ்வொரு மாதமும் 75 ஜிபி டேட்டா நன்மை, 200 ஜிபி வரை ரோல்ஓவர் நன்மை மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ .699 போஸ்ட்பெய்ட் திட்டம் அதேபோல் வரம்பற்ற டேட்டா நன்மையை வழங்குகிறது. வரம்பற்ற டேட்டா என்பது இந்த இடத்தில் 150 ஜி.பி டேட்டாவை குறிக்கிறது. இதுவும் மாதத்திற்கு 100 எஸ்.எம்.எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகளுடன் பயனர்களுக்குக் கிடைக்கிறது.

ரூ .649, ரூ .799, ரூ .999 மற்றும் ரூ. 1,348 ஆகிய பேமிலி ரேஞ் போஸ்ட்பெய்டு திட்டங்கள் இப்போது ZEE5 பிரீமியம் நன்மை இல்லாமல் வருகிறது. அதே சமயம் டெல்கோவின் ரூ .355, ரூ .405, ரூ. 595, ரூ. 795 மற்றும் ரூ .2,595 ஆகிய ஐந்து ப்ரீபெய்ட் திட்டங்கள் மட்டும் இன்னும் ZEE5 பிரீமியம் சந்தாவுடன் கிடைக்கிறது என்பது இந்த இடத்தில் கவனிக்கத்தக்கது.

வோடபோன் ஐடியா பயனர்களுக்கு இனி இது ''கட்''.. அதுக்கு பதில் இது

இப்போது Vi இருக்கும் நிலைமையில் இந்த விரும்ப தகாத மாற்றம் அதன் பயனர்களிடம் என்ன எதிர்ப்பை உருவாக்கும் என்பது நமக்குச் சரியாகத் தெரியவில்லை. காரணம், ஏற்கனவே வோடபோன் ஐடியா நிறுவனம் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்துடன் நடக்கும் டெலிகா போட்டியில் பின்னடைவில் உள்ளது. கடந்த ஆண்டின் இறுதிக்குள் குறிப்பிட்ட அளவிலான சில வோடபோன் ஐடியா பயனர்கள் ஏர்டெல் மற்றும் ஜியோவுக்கு தங்கள் சேவையை மாற்றிவிட்டனர் என்று ஒரு அறிக்கை தகவல் தெரிவித்திருந்தது.

வோடபோன் ஐடியாவை பயனர்கள் தேடி வருவதற்கு ஒரு முக்கிய காரணம், இதில் வரம்பற்ற இரவு நேர டேட்டா நன்மை கிடைக்கிறது. தினம் கிடைக்கும் டேட்டா நன்மையுடன் கூடுதல் டேட்டா நன்மையையும் கிடைக்கிறது. இது போக நிறுவனம் டேட்டா ரோல் ஓவர் வசதியையும் வழங்கி, பல OTT சேவைகளையும் வழங்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea No Longer Offers ZEE5 Premium Benefit With Postpaid Plans Priced Above Rs 499 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X