Home
News

Vi-க்கு கும்பிடு.. இனி ரூ.179 போதும்.. 25 நாட்கள் வேலிட்டிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 300 எஸ்எம்எஸ்!

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்களைத் தொடர்ந்து வோடபோன் ஐடியா (Vodafone Idea - Vi) சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கும் புதிய வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) களமிறக்கப்பட்டு உள்ளன. டிராய் (TRAI) உத்தரவின்படி, வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.179 ஆரம்ப விலையில் இருந்து வாய்ஸ் ஒன்லி ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுவந்து இருக்கிறது.

​டேட்டா சலுகை அதிகம் கொண்ட திட்டங்களுக்கு மாற்றாக, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே போதும் என்று கேட்கும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் கைகொடுக்கின்றன. குறிப்பாக பீச்சர் போன் (Feature Phone) பயன்படுத்துபவர்கள், இரண்டாவது சிம் கார்டை ஆக்டிவாக வைத்திருக்க விரும்புபவர்களுக்கு மலிவான விலையில் இந்த திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Vi-க்கு கும்பிடு.. இனி ரூ.179 போதும்.. 25 நாட்கள் வேலிட்டிட்டி!

​டிராய் உத்தரவின்படி, கம்மியான வேலிடிட்டியிலும் மலிவான விலையிலும் வாய்ஸ் ஒன்லி திட்டங்களை கொடுக்க வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு செய்து, 25 நாட்கள் முதல் 365 நாட்கள் வரையிலான வேலிடிட்டியில் 6 திட்டங்களை இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் குறிப்பிட்ட திட்டங்களில் ஓடிடி சலுகைகளும் கிடைக்கின்றன.

​விஐ ரூ.179 மற்றும் ரூ.185 வாய்ஸ் திட்டங்கள் (Vi Rs 179 & Rs 185 Voice Plans): வோடபோன் ஐடியாவின் வாய்ஸ் ஒன்லி பட்டியலில் ரூ.179 திட்டமே ஆரம்ப விலை திட்டமாக இருக்கிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 25 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Domestic Calls) மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் (SMS) கொடுக்கப்படுகின்றன.

​கூடுதலாக விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies & TV) ஆப் சந்தா கிடைக்கிறது. இதற்கு அடுத்தபடியாக இருக்கும் ரூ.185 திட்டத்தில் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. இதிலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன. ஆனால், இதில் ஓடிடி ஆப் சலுகை எதுவும் கொடுக்கப்படவில்லை.

​விஐ ரூ.203 மற்றும் ரூ.206 வாய்ஸ் திட்டங்கள் (Vi Rs 203 & Rs 206 Voice Plans): ஒரு மாத வேலிடிட்டி கேட்கும் கஸ்டமர்களுக்காக இந்த இரண்டு திட்டங்களும் கொண்டுவரப்பட்டு உள்ளன. ரூ.203 விலையில் கிடைக்கும் வாய்ஸ் ஒன்லி திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதேபோல ரூ.206 திட்டத்தில் 1 காலண்டர் மாத (1 Calendar Month) வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

​அதாவது, ஒவ்வொரு மாதமும் அதே தேதியில் ரீசார்ஜ் செய்யும் வகையில் இந்த திட்டம் வருகிறது. இந்த இரண்டு திட்டங்களிலுமே அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. இதை தவிர வேறு எந்த கூடுதல் சலுகைகளும் இந்த திட்டங்களில் கிடைக்காது.

​விஐ ரூ.470 மற்றும் ரூ.1849 வாய்ஸ் திட்டங்கள் (Vi Rs 470 & Rs 1849 Voice Plans): அதிக நாட்கள் வேலிடிட்டி வேண்டும் என்பவர்களுக்காக ரூ.470 மற்றும் ரூ.1849 திட்டங்கள் உள்ளன. ரூ.470 திட்டத்தில் 84 நாட்கள் (3 மாதங்கள்) வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 900 எஸ்எம்எஸ்கள் கிடைக்கின்றன.

​அதேபோல, ஒரு வருட வேலிடிட்டி கொண்ட ரூ.1849 திட்டத்தில் 365 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த அனைத்து திட்டங்களிலும் கொடுக்கப்பட்டுள்ள எஸ்எம்எஸ் வரம்பு முடிந்த பிறகு, லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1.5 கட்டணமாக வசூலிக்கப்படும். தனியாக டேட்டா வவுச்சர் ரீசார்ஜ் செய்யாமல் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தினால், ஒரு எம்பிக்கு 50 பைசா (50p/MB) கட்டணம் பிடிக்கப்படும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea New Voice Only Prepaid Plans Starting At Rs 179 With 25 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X