இப்போ ரூ.175 போதும்.. மாசம் முழுக்க மஜா.. Vodafone தரமான செய்கை! அம்பானி கிட்ட.. திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
Vodafone Idea New OTT Plan: ஒட்டுமொத்த டெலிகாம் இண்டஸ்ட்ரியுமே வோடாபோன் ஐடியாவின் கம்பேக்கிற்கு தான் மரண வெடிட்யிங். ஏனென்றால் அப்போது தான் (இந்திய டெலிகாம் துறையில்) உண்மையாகவே ஆட்டம் சூடுபிடிக்கும். முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமும், சுனில் மிட்டல் (Sunil Mittal) தலைமையிலான பார்தி ஏர்டெல் (Bharti Airtel) நிறுவனமும் கிட்டத்தட்ட நாடு முழுவதும் தத்தம் 5ஜி சேவைகளை (5G Service) அறிமுகம் செய்துவிட்டன.
அவ்வளவு ஏன் அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) கூட பான் இந்தியா அளவிலான தனது 5ஜி அறிமுகத்தை பற்றி நாளுக்கு நாள் அப்டேட் கொடுக்கிறது. ஆனால் வோடபோன் ஐடியாவோ.. தனது 5ஜி லான்ச், 5ஜி நெட்வொர்க், 5ஜி டெக்னாலஜி என எதைப் பற்றியுமே வாய் திறக்கவில்லை.

தற்போது வரையிலாக இந்நிறுவனத்தின் 5ஜி அறிமுகம் (Vodafone Idea 5G Launch) குறித்த நம்பகமான தகவல் ஒன்றுகூட இல்லை. இதற்கிடையில் வோடாபோன் நிறுவனம் எதோ செய்யப்போகிறது என்பதை குறிக்கும் வண்ணம்.. வெறும் ரூ.175 க்கு ஒரு தரமான திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடாபோன் ஐடியாவானது ரூ.175 க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (New Rs 175 Prepaid Plan) அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஆக்டிவ் சர்வீஸ் வேலிடிட்டி (Active Service Validity) உடன் வரவில்லை என்றாலும் கூட இது போதுமான டேட்டாவுடன் சேர்த்து எக்கச்சக்கமான ஓடிடி சந்தாக்களை (OTT subscriptions) வழங்குகிறது. அதாவது ரூ.175 ஒரு டேட்டா வவுச்சராகும் (Data voucher). இதன் கீழ் ஒரே லாக்இன்-ஐ பயன்படுத்தி ஏராளமான ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் விஐ மூவீஸ் & டிவி சூப்பர் சந்தா ( Vi Movies & TV Super subscription) இலவசமாக கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் என்னென்ன ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்? ஜீ5 (ZEE5), சோனி லைவ் (SonyLIV), பேன்கோட் (FanCode), அட்ராங்கி (Atrangi), கிளிக் (Klikk), சாவ்பால் (Chaupal), நம்மபிளிக்ஸ் (NammaFlix), மனோரமா மேக்ஸ் (Manorama MAX), பிளேபிலிக்ஸ் (PlayFlix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷீமாரூ மீ (Shemaroo Me), ஹாங்காமா (Hungama), யப் டிவி (YuppTV), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் (Pocket Films).
விஐ-யின் இந்த புதிய ரூ.175 திட்டம் இப்போது வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் இணையதளம் (Vi Website) மற்றும் மொபைல் ஆப் (Mobile app) வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மேலும் இது அனைத்து தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள பயனர்களுக்கும் அணுக கிடைக்கிறது. ரூ.175-ன் டேட்டா நன்மையை பொறுத்தவரை, வோடபோன் ஐடியாவின் ரூ.175 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் உங்களுக்கு 10ஜிபி டேட்டா (10GB Data) கிடைக்கும்.
ரூ.175 உடன் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் இல்லை என்றாலும் கூட இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 28 நாட்கள் ஆகும். அதாவது உங்களுடைய மெயின் ரீசார்ஜ் திட்டத்தின் சர்வீஸ் வேலிடிட்டி ஒருபக்கம் ஒருக்க, அதனுடன் சேராமல் ரூ.175-ன் சர்வீஸ் வேலிடிட்டி மறுபக்கம் இருக்கும். இருப்பினும் உங்களிடம் மெயின் ரீசார்ஜ் இருந்தால் மட்டுமே டேட்டா பலன்களை பயன்படுத்த முடியும்.
ரூ.175 திட்டத்தை போலவே வோடாபோன் ஐடியா நிறுவனத்தின் கீழ் வேறு சில ஓடிடி பண்டுல்டு டேட்டா பேக்குகளும் (OTT bundled data pack) ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன: அந்த திட்டங்களின் விலைகள் ரூ.169, ரூ.151, ரூ.248, ரூ.202 மற்றும் ரூ.154 ஆகும்.


Click it and Unblock the Notifications








