Home
News

நேரம் பார்த்து அடித்த Vodafone Idea.. இனிமே ரூ.1,199-க்கு அன்லிமிடெட் இன்கம்மிங்.. 2ஜிபி டேட்டா.. புது பிளான்!

இந்தியாவில் இருந்து ஹஜ் பயணத்திற்கு செல்லும் ஒட்டுமொத்த வோடபோன் ஐடியா கஸ்டமர்களையும் தட்டித்தூக்கும்படி புதிய ஐஆர் பேக்குகளை (New IR Packs) அந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மட்டுமல்லாமல், போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கும் சேர்த்தே திட்டங்களை கொண்டுவந்துள்ளது. இதனால், ஹஜ் பயணத்திற்கு செல்லும் பயணிகள் தங்களது இந்திய சொந்தங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க முடியும். இந்த வோடபோன் ஐடியா ஐஆர் திட்டங்களின் விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஜூன் மாதத்தில் இருந்து ஹஜ் பயணம் தொடங்க இருக்கிறது. இதனால் சவுதி அரேபியாவிற்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கிறது. அவர்களுக்காக பிரத்யேக ஐஆர் பேக்குகளை வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ளது. அன்லிமிடெட் இன்கம்மிங் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகளுடன் 20 மற்றும் 40 நாட்கள் வேலிடிட்டியில் வெளியாகி இருக்கின்றன.

நேரம் பார்த்து அடித்த Vodafone Idea.. இனிமே ரூ.1,199-க்கு அன்லிமிடெட்!

வோடபோன் ஐடியா ஐஆர் பேக்குகள் ப்ரீபெய்ட் (Vodafone Idea IR Packs Prepaid): வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு 2 திட்டங்கள் கிடைக்க இருக்கின்றன. ரூ.1,199 விலையில் ஒரு திட்டமும், ரூ.2,388 விலையில் மற்றொரு திட்டமும் இருக்கிறது. முதலாவது திட்டத்தில் 20 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அன்லிமிடெட் இன்கம்மிங் கால்கள் (Unlimited Incoming Calls) கிடைக்கின்றன.

மேலும், 2 ஜிபி டேட்டா மற்றும் 150 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls) கிடைக்கின்றன. அதேபோல ரூ.15 விலைக்கு ஒரு எஸ்எம்எஸ் செய்ய கிடைக்கிறது. வோடபோன் ஐடியா ரூ.2,388 ஐஆர் திட்டத்தை பார்க்கையில், 40 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் இன்கம்மிங் கால்களை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

மேலும், 4 ஜிபி டேட்டா சலுகையும், 300 நிமிடங்களுக்கான அவுட்கோயிங் சலுகையும் கிடைக்கிறது. இந்த ஐஆர் திட்டத்துக்கும் ரூ.15 மதிப்பில் ஒரு இன்டர்நேஷனல் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. ஆகவே, நீண்ட நாட்களாக சவுதி அரேபியாவில் இருக்கும்படி திட்டமிடும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் சரியாக இருக்கும். இப்போது, போஸ்பெய்ட் ஐஆர் பேக்குகளை பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா ஐஆர் பேக்குகள் போஸ்ட்பெய்ட் (Vodafone Idea IR Packs Postpaid): இதில் போஸ்ட்பெய்ட் கஸ்டமர்களுக்கு ரூ.2,500 விலையிலும், ரூ.4,500 விலையிலும் திட்டங்கள் இருக்கின்றன. இதில் முதலாவது ஐஆர் திட்டத்தில் அன்லிமிடெட் இன்கம்மிங் கால்கள் மற்றும் 4 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மேலும், 500 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் கால்கள் வருகிறது.

இதுபோக இலவச இன்கம்மிங் எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது. அதேபோல 20 அவுட்கோயிங் எஸ்எம்எஸ் சலுகை கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக வேலிடிட்டி வேண்டுமானால், 2ஆவது ஐஆர் திட்டத்துக்கு செல்லலாம். இதில் 40 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் இன்கம்மிங் கால்கள் கிடைக்கின்றன. அதேபோல 8 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது.

மேலும், 1,000 நிமிடங்களுக்கு அவுட்கோயிங் கால்கள் மற்றும் இலவச இன்கம்மிங் எஸ்எம்எஸ்கள் வருகிறது. 30 அவுட்கோயிங் எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த இன்டர்நேஷனல் ரோமிங் திட்டங்கள் மட்டுமல்லாமல், குறைந்த வேலிடிட்டி கொண்ட திட்டங்களும் அறிமுகமாகி இருக்கின்றன. ஆகவே, 3 நாட்கள் மற்றும் 1 நாட்களுக்கும் திட்டங்கள் இருக்கின்றன.

வோடபோன் ஐடியா ரூ 495 திட்டத்தை பெற்றால் 3 நாட்களுக்கு சலுகைகள் கிடைக்கின்றன. அதேபோல ரூ.749 மதிப்பிலான திட்டத்தில் அன்லிமிடெட் சலுகைகள் ஒரு நாளுக்கு கொடுக்கப்படுகிறது. இதேபோல ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கும் திட்டங்களை கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea New International Roaming Packs For Hajj Pilgrims With Unlimited Incoming Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X