இது அம்பானிக்கே வராத ஐடியாவாச்சே.. Vodafone-க்கு வந்த Easy Plus சேவை.. கஸ்டமர்களை கையில் பிடிக்க முடியல!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான ஈஸி பிளஸ் (Easy Plus) என்கிற புதிய சேவையை அறிவித்துள்ளது. இது தனிப்பட்ட தேவைகளுக்காக வோடபோன் ஐடியாவிலிருந்து கூடுதல் சேவைகளை வாங்க விரும்பும் கார்ப்பரேட் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான சேவையாகும். இதன்கீழ் சர்வதேச ரோமிங், ஓடிடி (ஓவர்-தி-டாப்) சந்தாக்கள் மற்றும் பல சேவைகளை கார்ப்பரேட் தங்கள் பயனர்கள் திட்டத்தில் சேர்க்கலாம்.
வோடபோன் ஐடியாவின் புதிய ஈஸி பிளஸ் சேவையின் கீழ் என்னென்ன சேவைகள் அணுக கிடைக்கும்?
01. சர்வதேச ரோமிங்: 29 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் விஐ வாடிக்கையாளர்கள் ஈஸி பிளஸ் சேவையின் கீழ் ரோமிங் பேக்குகளை வாங்கலாம். இதன்கீழ் 24 மணிநேரம், 10 நாள் மற்றும் 14 நாள் செல்லுபடியாகும் பேக்குகள், ரூ.749 முதல் ரூ.4999 வரையிலான விலைக்கு கிடைக்கும்.

02. ஓடிடி சந்தாக்கள் - ஈஸி பிளஸ் சேவையின் கீழ் சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5) மற்றும் பல ஓடிடி தளங்களுக்கான சந்தாக்களை பயனர்கள் தங்கள் திட்டத்தில் சேர்க்கலாம்.
03. கிஃப்ட்டிங்: கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் பயனர்கள் தங்கள் நிறுவன எண்களில் இருந்து நேரடியாக மற்றவர்களுக்கு ஓடிடி சந்தாக்களை பரிசளிக்கவும் முடியும்.
வோடபோன் ஐடியாவின் இந்த புதிய ஈஸி பிளஸ் சேவை ஆனது தற்போது விஐ ஆப் வழியாக அணுக கிடைக்கிறது. இந்த சேவை விஐ நிறுவனத்தின் கார்ப்பரேட் போஸ்ட்பெய்டு பயனர்களுக்கான பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்ஏ என்பதில் சந்தேகமே வேண்டாம். மேலும் இது தனிப்பட்ட தேவைகள் உட்பட அனைத்து தேவைகளுக்குமாக ஒரே ஒரு சிம் கார்ட்டை பயன்படுத்தவும் உதவும்.
வோடபோன் ஐடியாவின் புதிய ஈஸி பிளஸ் சேவையின் அறிமுகமானது, இந்நிறுவனத்தின் போஸ்ட்பெய்டு பிரிவில் புதிய சந்தாதாரர் சேர்க்கைக்கு வழிவகுக்குமா என்று கேட்டால். கண்டிப்பாக இது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்கும். இந்நிறுவனம் ஏற்கனவே நாட்டின் இரண்டாவது பெரிய போஸ்ட்பெய்டு மொபைல் சந்தாதாரர் தளத்தை கொண்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் வோடாபோன் ஐடியா நிறுவனமானது விஐ கஸ்டமர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான "ஹீரோ பேக்குகளை" (Hero Packs) தற்போது "சூப்பர்ஹீரோ பேக்குகள்" (SuperHero Packs) என்று மறுபெயரிட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த மாற்றத்தின் ஒருபகுதியாக, விஐ ஹீரோ பேக்குகளின் கீழ் கிடைக்கும் முக்கிய நன்மைகளில் ஒன்றான "பிங்கே ஆல் நைட்" நன்மையின் கீழ் முன்னதாக 6 மணிநேர அன்லிமிடெட் டேட்டா மட்டுமே அனுக கிடைத்தது.
அதாவது நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக மொத்தம் 6 மணி நேரத்திற்கு, முற்றிலும் இலவசமாக அன்லிமிடெட் டேட்டா அணுக கிடைத்தது. தற்போது இது 12 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் "சூப்பர்ஹீரோ நன்மைகள்" என்கிற பெயரின் கீழ் நள்ளிரவு 12 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை.. அதாவது 12 மணிநேரத்திற்கு இலவச டேட்டா கிடைக்கும்.
விஐ அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உள்ள "சூப்பர்ஹீரோ பேக்" வகையின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள திட்டங்களின் விலை விவரங்கள் இதோ:
01. ரூ.365 திட்டம்
02. ரூ.379 திட்டம்
03. ரூ.407 திட்டம்
04. ரூ.408 திட்டம்
05. ரூ.409 திட்டம்
06. ரூ.449 திட்டம்
07. ரூ.469 திட்டம்
08. ரூ.539 திட்டம்
09. ரூ.649 திட்டம்
10. ரூ.795 திட்டம்
11. ரூ.979 திட்டம்
12. ரூ.994 திட்டம்
13. ரூ.996 திட்டம்
14. ரூ.997 திட்டம்
15. ரூ.998 திட்டம்
16. ரூ.1198 திட்டம்
17. ரூ.1599 திட்டம்
18. ரூ.3699 திட்டம்
19. ரூ.3599 திட்டம்
20. ரூ.3799 திட்டம்.


Click it and Unblock the Notifications








