Vodafone விட்ட பிரம்மாஸ்திரம்.. 365 நாளும் சிம் ஆக்டிவ்.. அன்லிமிடெட் டேட்டா, வாய்ஸ், SMS.. புது பிளான்!
இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக உள்ள வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) நிறுவனம் ஆனது, அமைதியான முறையில் ஒரு புதிய வருடாந்திர ப்ரீபெய்ட திட்டத்தை (New yearly prepaid plan) அறிமுகப்படுத்தி உள்ளது.
365 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் கொண்ட இது ஒரு தனித்துவமான ப்ரீபெய்ட் திட்டமாகும். ஏனென்றால் நாட்டில் வருடாந்திர சேவை செல்லுபடியாகும் காலத்துடன் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் இருந்தாலும், இது மற்றவற்றிலிருந்து மாறுபடுகிறது. இது வரம்பற்ற டேட்டா (unlimited data) வசதியுடன் வருகிறது.

ரூ.4,600 மதிப்பிலான இந்த புதிய வி திட்டம் ஆனது தற்போது நாடு முழுவதும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இத்திட்டம் தற்போது வோடபோன் ஐடியாவின் இணையதளம் மற்றும் மொபைல் ஆப் வழியாக ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரங்களை இங்கே விரிவாக பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ.4,600 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்: வோடபோன் ஐடியாவின் ரூ.4,600 ப்ரீபெய்ட் திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்புகள் (voice calling), ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் வரம்பற்ற டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இத்திட்டத்தின் சேவை செல்லுபடியாகும் காலம் 365 நாட்களாகும்.
வோடபோன் ஐடியா இதனை 'வரம்பற்ற டேட்டா' என்று கூறினாலும், இது உண்மையில் முழுமையான வரம்பற்ற டேட்டா அல்ல. ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி என்ற வரம்பு (FUP) இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.4600 திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 5ஜி டேட்டா நன்மையும் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
5ஜி டேட்டாவிற்கும் அதே 'நியாயமான பயன்பாட்டுக் கொள்கை' (FUP) - அதாவது ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 300ஜிபி வரம்பு - பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ளவும். எனவே, நீங்கள் 4ஜி அல்லது 5ஜி என எதை பயன்படுத்தினாலும், எப்யுபி டேட்டா பயன்பாட்டு வரம்பு ஒரே மாதிரியாகவே இருக்கும்.
இத்திட்டத்தைப்பயன்படுத்துவதற்கான சராசரி தினசரி செலவு ரூ.12.6 ஆகும். ஒட்டுமொத்தமாக ரூ.4,600 திட்டம் தற்போதுள்ள சிறந்த வருடாந்திர ப்ரீபெய்ட் சலுகைகளில் ஒன்றாகும். ஏனெனில் 300ஜிபி என்ற எப்யுபி வரம்பு இருந்தாலும், ஒவ்வொரு 28 நாட்களுக்கும் இது கணிசமான அளவு டேட்டாவையே வழங்குகிறது.
வோடபோன் ஐடியாவில் வரம்பற்ற டேட்டா வசதியுடன் கூடிய பிற சேவை செல்லுபடியாகும் காலத்தைக் கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களும் உள்ளன. அந்த திட்டங்களில் உங்களுக்கு விருப்பம் இருந்தால்,வி-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் ஆப்பை பார்வையிடலாம்.
வோடபோன் ஐடியா தனது குறிப்பிட்ட சில மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இந்த சந்தாவை இலவசமாக வழங்குவதும் இங்கே குறிப்பிடத்தக்கது. மாணவர்களுக்கு ஸ்பாடிஃபை பிரீமியத்தின் விலை மாதத்திற்கு ரூ.69 ஆகவும், மற்றவர்களுக்கு மாதத்திற்கு ரூ.139 ஆகவும் உள்ளது.
குறிப்பிட்ட மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இலவச ஸ்பாடிஃபை பிரீமியத்தை வழங்கவுள்ள வோடபோன் ஐடியா: வோடபோன் ஐடியா தனது போஸ்ட்பெய்ட் (Postpaid) மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இனி கூடுதல் கட்டணம் ஏதுமின்றி ஸ்பாடிஃபை பிரீமியம் கிடைக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு இந்திய தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் ஸ்பாடிஃபை மேற்கொள்ளும் இத்தகைய முதல் கூட்டணி இதுவாகும்.
தெரியாதவர்களுக்காக ஸ்பாடிஃபை என்பது உலகளவில் பிரபலமான ஒரு ம்யூசிக் ஸ்ட்ரீமிங் தளமாகும், இது பயனர்கள் "ஆன் தி கோ"வில் (அதாவது எங்கு வேண்டுமானாலும்) இசையை கேட்க அனுமதிக்கிறது. இருப்பினும், இந்த ஆப்பின் இலவச பதிப்பை பயன்படுத்தும்போது பயனர்கள் தொடர்ந்து விளம்பரங்களை கேட்க வேண்டியிருக்கும். ஆனால் இனி அந்த நிலை இருக்காது.


Click it and Unblock the Notifications