Home
News

இதுக்குமேல இதான்.. வோடபோன் ஐடியா கஸ்டமர்களே.. மினிமம் ரூ.20 அதிகம் எடுத்து வைங்க.. இல்லனா சலுகைகள் கிடைக்காது!

ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அடுத்தபடியாக அதிக கஸ்டமர்களை கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் கட்டண உயர்வு (Price Hike) அமலுக்கு வந்துவிட்டது. என்ட்ரி லெவல் திட்டத்துக்கே ரூ.20 அதிகரித்துள்ளது. 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.600 விலை ஏற்றப்பட்டுள்ளது. இப்படி, வேல்யூ திட்டங்கள், தினசரி டேட்டா திட்டங்கள், அதிக வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் என்று பல்வேறு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை அதிகமாக இருக்கிறது. இவற்றின் பழைய விலை மற்றும் புதிய விலை விவரங்கள் இதோ.

வோடபோன் ஐடியா புதிய ரீசார்ஜ் திட்டங்கள் (Vodafone Idea New Recharge Plan): அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகை கொடுக்கும் என்ட்ரி லெவல் திட்டமான ரூ.179 திட்டம் ரூ.199 விலைக்கு கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி, 2 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.

இதுக்குமேல இதான்.. வோடபோன் ஐடியா கஸ்டமர்களே.. மினிமம் ரூ.20 தேவைங்கோ!

அன்லிமிடெட் வாய்ஸ் கால், 6 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் கொண்ட ரூ.459 மதிப்பிலான திட்டம் இப்போது ரூ.509 விலைக்கு வருகிறது. இதற்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. 365 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 24 ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ் சலுகை கொண்ட ரூ.1799 திட்டம் ரூ.1999 விலையில் வருகிறது.

தினசரி டேட்டா திட்டத்தை பார்க்கையில், 1 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ், 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் போன்ற சலுகைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ரூ.299 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் இப்போது ரூ.349 விலையில் கிடைக்கிறது.

அதேபோல 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் சலுகைகளுடன் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ரூ.299 மதிப்பிலான திட்டம் இப்போது ரூ.349 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதே சலுகைகளுடன் ஒரு மாத வேலிடிட்டியில் மற்றொரு திட்டம் வருகிறது.

இந்த திட்டத்தின் விலை ரூ.319ஆக இருந்தது. இப்போது ரூ.379 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், 56 நாட்கள் வேலிடிட்டி, 1.5 ஜிபி தினசரி டேட்டா , அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 100 எஸ்எம்எஸ் சலுகை கொண்ட ரூ.539 திட்டம் ரூ.649 பட்ஜெட்டில் கிடைக்கிறது.

தினசரிக்கு 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கொண்ட ரூ.539 மதிப்பிலான திட்டம் இப்போது ரூ.649 விலையில் கிடைக்கிறது. அதிக நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்கள் வேண்டுமானால், பின்வரும் திட்டங்களை தேர்ந்தெடுக்கலாம்.

தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட், 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் சலுகைகளுடன் 84 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் ரூ.719 திட்டமானது, இப்போது ரூ.859 விலையில் கிடைக்கிறது. இதே சலுகைகளுடன் 2 ஜிபி டேட்டா வேண்டுமானால், ரூ.979 திட்டத்துக்கு செல்லுங்கள்.

இந்த திட்டத்திலும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் சலுகைகள் கிடைக்கிறது. இறுதியாக 365 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரூ.2,899 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் இப்போது, ரூ.3,499 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1.5 ஜிபி டேட்டா வருகிறது.

அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை வருகிறது. மேலும் அன்லிமிடெட் நைட் டேட்டா, டேட்டா ரோலோவர், டேட்டா டிலைட் சலுகைகள் கிடைக்கிறது. இந்த புதிய விலைகளில் மட்டுமே இனிமேல் திட்டங்கள் கிடைக்கும். இதேபோல ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் கட்டண உயர்வு ஜூலை 3ஆம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Mobile Recharge Price Hike Come into Effect From Today Check New Prepaid Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X