அம்பானிக்கு பதிலடி கொடுத்த ஐடியா-வோடபோன் கூட்டு ஒப்பந்தம்.! எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?
ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம் மூலம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கைகோர்த்திருக்கிறது.
இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி நிலவி வருகிறது. இந்தப் போட்டியில் ஜியோ நிறுவனம் மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்குத் தான் அதிக போட்டி நிலவியது.

இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் நிறுவங்களை பின்னுக்குத்தள்ளிய ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்திற்குச் சரியான பதிலடி கொடுத்திருக்கிறது வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள்.
ஐடியா மற்றும் வோடாஃபோன் நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்தம் மூலம் இன்று அதிகாரப்பூர்வமாகக் கைகோர்த்திருக்கிறது. இணைந்த இந்நிறுவனங்கள், இந்திய பில்லினியர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்போம்காம் நிறுவனத்திற்கு ஒரு கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டு ஒப்பந்தம், உள்நாட்டு டெலிகாம் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மற்ற டெலிகாம் நிறுவங்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து, இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நிறுவனமாக ஐடியா- வோடபோன் நிறுவனம் உருவாகியுள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி இல் 23 மில்லியன் டாலர் மதிப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதே போல் இந்தக் கூட்டு ஒப்பந்தம், 1.6 லட்சம் கோடி மதிப்பில் இன்று கையெழுத்தானது.
இரண்டு நிறுவனங்களுக்கும் 40% வருமான பகிர்வு வழங்கப்பட்டிருக்கிறது, 40 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டு நிறுவனமாக ஏர்டெல்லை பின்னுக்குத்தள்ளி தற்பொழுது முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவன குழுவின் தலைவராக 12 இயக்குநர்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளனர். இந்நிறுவனத்தின் தலைவராக குமார் மங்கலம் பிர்லா-வும் தலைமை நிர்வாக அதிகாரியாக பாலேஷ் ஷர்மா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications