Home
News

நம்பமுடியாத நன்மைகளுடன் வரும் Vi நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்கள்.. கண்டிப்பா யூஸ் ஆகும்..

Vi வழங்கும் நீண்ட கால திட்டங்களில் எது சிறந்த திட்டம் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். Vi திட்டத்தில் கிடைக்கும் வரம்பற்ற தரவு, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் சில ஓவர்-தி-டாப் (OTT) நன்மைகளுடன் வரும் திட்டங்களில் எது சிறந்தது என்று நான்கு திட்டங்களை உங்களுக்காகத் தேர்வு செய்துள்ளோம். இவற்றின் நன்மைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

முதல் திட்டமான ரூ. 1197 திட்டம்

முதல் திட்டமான ரூ. 1197 திட்டம்

வோடபோன் ஐடியாவின் நீண்ட கால ப்ரீபெய்ட் திட்டங்களில் சிறந்த நான்கு திட்டங்களாக அவை ரூ. 1197, ரூ. 1499, ரூ. 2399 மற்றும் ரூ. 2595 திட்டங்கள் திகழ்கிறது. இதில் முதல் திட்டமான ரூ. 1197 திட்டம் 180 நாட்கள் (6 மாதங்கள்) செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது மற்றும் 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகை மற்றும் வி மூவிஸ் & டிவியின் OTT நன்மைகளுடன் வருகிறது.

இரண்டாவது ரூ. 1499 திட்டம்

இரண்டாவது ரூ. 1499 திட்டம்

இரண்டாவது திட்டமாக நமது பட்டியலில் இருக்கும் திட்டம் ரூ. 1499 திட்டமாகும். இந்த திட்டம் 365 நாட்கள், அதாவது 1 ஆண்டு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆனால், இது மொத்தமாக 24 ஜிபி தரவை மட்டுமே வழங்குகிறது. ஆனால் உங்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மையுடன் வீ மூவிஸ் & டிவியின் இலவச சந்தாவுடன் வழங்குகிறது. இதில் மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கிறது.

மூன்றாவது சிறந்த திட்டமான ரூ. 2399 திட்டம்

மூன்றாவது சிறந்த திட்டமான ரூ. 2399 திட்டம்

நமது பட்டியலில் இருக்கும் மூன்றாவது சிறந்த நீண்ட கால திட்டமாக ரூ. 2399 திட்டம் திகழ்கிறது. இது 365 நாட்கள், அதாவது 1 ஆண்டு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் பயனர்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகையையும் தொகுக்கிறது.

இறுதியாக ரூ. 2595 திட்டம்

இறுதியாக ரூ. 2595 திட்டம்

கடைசியாக, ரூ. 2595 திட்டம் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும், இது 365 நாட்கள் (1 ஆண்டு) செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ZEE5 பிரீமியத்தின் OTT 1 வருட நன்மையுடன், Vi மூவிஸ் & டிவி பயன்பாட்டிற்கான இலவச அணுகலுடன் கிடைக்கிறது. இது 'வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர்' சலுகையையும் தொகுக்கிறது.

பிங் ஆல் நைட் நன்மை

பிங் ஆல் நைட் நன்மை

மேலே அனைத்து திட்டங்களும் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. ரூ.1499 திட்டம் மட்டும் மொத்தமாக 3,600 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும், ரூ. 1499 திட்டம் மட்டுமே Vi இலிருந்து 'Binge All Night' இன் பயனைப் பெறவில்லை. தெரியாதவர்களுக்கு, 'பிங் ஆல் நைட்' நன்மை என்பது தினமும் இரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் வரம்பற்ற டேட்டாவை பயன்படுத்தும் நன்மையாகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Long Term Prepaid Plans : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X