Home
News

மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!

சமீபத்தில் தான் ஏர்டெல் நிறுவனம் ரூ.99 திட்டத்திற்கு பதிலாக ரூ.155 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டி கொடுக்கும் வகையில் ரூ.99 விலையில் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது வோடபோன் ஐடியா நிறுவனம்.

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்?

இப்போது வோடபோன் ஐடியா அறிமுகம் செய்த புதிய ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்ப்போம். அதாவது வோடபோன் ஐடியாவின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது ரூ.99 டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா நன்மைகளை வழங்குகிறது. மேலும் இதில் நொடிக்கு 2.5 பைசா கட்டணத்தில் உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் வழங்கப்படவில்லை. ஆனால் இந்த வோடபோன் ஐடியாவின் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea!

ஏர்டெல் திட்டம் விலை உயர்வு

அதேபோல் ஏர்டெல் நிறுவனம் ரூ.99 திட்டத்தின் விலை தற்போது ரூ.155 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஏர்டெல்லின் புதிய ரூ.155 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வெறும் 24 நாட்கள் மட்டும் வேலிடிட்டியை வழங்குகிறது. பின்பு இதில் 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், இலவச ஹெலோ டியூன்கள்இ வின்க் மியூசிக் சந்தா வழங்கப்படுகிறது.

ஏற்கனவே இருந்த ஏர்டெல் ரூ.99 திட்டம் ஆனது 28 நாட்கள் வேலிடிட்டி, 200எம்பி டேட்டா, உள்ளூர் மற்றும் எஸ்டிடி அழைப்புகளுக்கு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் போன்ற நன்மைகளை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea!

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இலவச டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. ஆனாலும் இந்த இலவச டேட்டா சலகை ரூ.249 மற்றும் அதற்கும் அதிக விலை கொண்ட ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போது வோடபோன் ஐடியா நிறுவனத்திடம் உள்ள சில பட்ஜெட் விலை ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற சில நன்மைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் கூடுதலாக 2ஜிபி டேட்டா நன்மை உள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

மலிவு விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்த Vodafone Idea!

வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launches Rs.99 Prepaid Plan With 28 Days Validity: What Are The Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X