மாஸ் காட்டிய Vodafone Idea.. 365 நாள் வேலிடிட்டி.. ஒரு வருடத்திற்கு OTT.. புதிய திட்டம் அறிமுகம்.. என்ன விலை?
வோடபோன் ஐடியா (Vodafone Idea) தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதேபோல் மற்ற நிறுவனங்களை விட ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது இந்நிறுவனம். எனவே தான் வோடபோன் ஐடியா திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த திட்டம் அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக நன்மைகளை வழங்குகிறது. இப்போது வோடபோன் ஐடியாவின் ரூ.4999 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் நன்மைகளை இந்த திட்டத்தில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.4999 ப்ரீபேய்ட் திட்டம் (Vodafone Idea Rs 4999 Plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதேபோல அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை வரம்பற்ற டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் டேட்டா பற்றிய கவலையே இருக்காது. அதிக டேட்டா நன்மையைப் பயன்படுத்த முடியும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை
வழங்குகிறது வோடபோன் ஐடியா ரூ.4999 ப்ரீபேய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றன.
அதாவது ஒரு வருடத்திற்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்கப்படுகிறது. மேலும் Vi MTV ( மூவி மற்றும் டிவி) சந்தாவும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
Vi MTV சந்தா மூலம் சோனி லைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), பேன்கோட் (FanCode), மனோரமா மேக்ஸ் (ManoramaMax),உள்ளிட்ட 16 ஓடிடி தளங்களை பயன்படுத்த முடியும். குறிப்பாக ஒரு வருட ஓடிடி, வரம்பற்ற டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைப்பதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை 84 நாள் வேலிடிட்டி எதிர்பார்க்கும் வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.994 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
வோடாபோன் ஐடியா ரூ.994 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 84 நாட்கள வேலிடிட்டி வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதிகாலை 12 மணி முதல் மதியம் 12 மணி வரை வரம்பற்ற டேட்டா நன்மையும் இந்த திட்டத்தில் உள்ளது. பின்பு 3 மாதங்களுக்கான இலவச ஜியோ ஹாட்ஸ்டார் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), டேட்டா டிலைட்ஸ் (Data Delights) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








