அசத்தலான சலுகைகளுடன் அறிமுகம் செய்யப்பட்ட வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்.!

|

வி எனப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் புதிய ரூ.109 திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் ஆனது பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு பயன்படும் வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்த புதிய திட்டம் அழைப்பு நன்மைகள் மற்றும் டேட்டா நன்மைகளுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்.டி.டி மற்றும் ரோமிங்

மேலும் வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம் ஆனது அனைத்து வட்டங்களிலும் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வோடபோன்-ஐடியா அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற உள்ளூர், எஸ்.டி.டி மற்றும் ரோமிங் அழைப்புகளை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.109 திட்டம் ஆனது 1ஜிபி டேட்டா, 300 எஸ்எம்எஸ், கால் அழைப்பு நன்மைகளை 20 நாட்கள் வழங்குகிறது. குறிப்பாக கால் அழைப்பு நன்மைகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு இந்த புதிய திட்டம் பயனுள்ள வகையில் இருக்கும்என்றே கூறலாம்.

நமக்குனு சொந்தமா பூமிக்கு மேல் ஒரு விண்வெளி மையம் அமைக்கிறோம்: ரஷ்யாவின் மெர்சல் முடிவு!நமக்குனு சொந்தமா பூமிக்கு மேல் ஒரு விண்வெளி மையம் அமைக்கிறோம்: ரஷ்யாவின் மெர்சல் முடிவு!

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.99 ப்ரீபெய்ட் திட்டம்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட ரூ.109 திட்டம் தவிர அனைத்து வட்டங்களுக்கும் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டமும் கிடைக்கிறது. அதன்படி வோடபோன் ஐடியா ரூ.99 திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கும் வரம்பற்ற கால் அழைப்பு, 1ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.99 திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும்.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

வோடபோன் ஐடியா ரூ. 19, ரூ. 129, ரூ.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ. 19, ரூ. 129, ரூ. 148, ரூ. 109, மற்றும் ரூ. 149. ப்ரீபெய்ட் திட்டங்கள் சிம் கார்டை செயலில் வைத்திருக்க உதவும் என்றே கூறலாம். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஆரம்ப விலையான ரூ.19 திட்டம் ஆனது 200எம்பி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகளை 18 நாட்களுக்கு வழங்குகிறது. அதாவது 18 நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது ரூ.19 திட்டம்.

Realme Days sale: ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!Realme Days sale: ரியல்மி ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம்.!

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மை, 300 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உஷார், ஆபத்தான வைரஸ்- பிங்க் வாட்ஸ்அப் என பரவும் லிங்குகள்: மொத்த தகவல்களை திருடும் ஹேக்கர்கள்- இதை பண்ணாதிங்கஉஷார், ஆபத்தான வைரஸ்- பிங்க் வாட்ஸ்அப் என பரவும் லிங்குகள்: மொத்த தகவல்களை திருடும் ஹேக்கர்கள்- இதை பண்ணாதிங்க

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற கால் அழைப்பு நன்மைகள், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி உள்ளிட்ட பல சலுகைகளை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea launches Rs 109 plan What benefits are available: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X