ஜியோவுக்கு போட்டியாக வோடாபோன் ஐடியாவின் தெறிக்கவிடும் சலுகை.!
இந்ததுறையில் பயனர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அதிகளவில் லாபம் ஈட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இந்திய தொலை தொடர்பு துறை உலகளவில் அதிக பயனாளர்களையும், நீண்ட நேரம் பயன்படுத்வோர்களையும் கொண்டுள்ளது.

இந்ததுறையில் பயனர்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அதிகளவில் லாபம் ஈட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் வெளிநாடுகளை சேர்ந்த நிறுவனங்களும் இந்தியாவில் நுழைந்து சேவைகளை வழங்கி வருகின்றனர்.
இந்தியாவில் வோடபோன் ஐடியா, பாரதி ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் பொது மக்களுக்கு முதன்மையாக சேவையை வழங்கி வருகின்றது.

ஜியோ வருகை:
இந்திய தொலை தொடர்பு துறையில் ஜியோ கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன் நுழைந்தது. அதன் பிறகு பல்வேறு சலுகைகளையும் அறிவித்து விடாப்பிடியாக அதிக வாடிக்கையாளர்களை அள்ளியது. மேலும் அது 4 ஜி சேவையில் துவங்கியதால், அதிகமான வாடிக்கையாளர்களை பெற்று வருகின்றது.

சலுகை அறிவிப்பு:
ஜியோ நிறுவனம் குறைந்த விலைக்கு அதிகளவில் சேவைகளை வழங்கி வருகின்றது. மேலும், இலவச காலர் டியூன், மிஸ்டு கால் அலர்ட், ரோமிங், அளவில்லா அழைப்புகள், 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள் இலவசம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் வாரி வழங்கியதால், மற்ற நிறுவனங்கள் நலிவடைய தொடங்கின.

திவால் நோட்டீஸ் கொடுத்த ஏர்செல்:
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், ஏர்செல் இந்தியாவில் தனது சேவையை வழங்க இயலாமல் போனது. மேலும் தனது வாடிக்கையாளர்களுக்கு குட்பை சொல்லிவிட்டு சென்றது. மேலும், இதேபோல், நஷ்டம் காரணமாக அனில் அம்பானியின் ஆர்காம் நிறுவனமும் வெளியேறியது.

வோடாபோன் இந்தியா லிமிட்டெட் நிறுவனம்:
ஐடியா நிறுவனமும், வோடாபோன் நிறுவனமும் இணைந்துள்ளதால், இந்தியவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ளது.
இந்நிலையில், போடாபோன் இந்திய லிமிட் நிறுவனம் ஆல்ரவுண்டர் சார்ஜ் சலுகையை வோடபோன் ப்ரீபெயயிட் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. டாக்டைம் மற்றும் பேட்டா உள்ளிட்டவற்ற வழங்கும் புதிய சலுகைகள் ரூ.25 முதல் ரூ.245 வரை அறிவித்துள்ளது.

விவரம்:
ரூ.25க்கு ரூ.18 டாக்டைம், அழைப்புகட்டணம் நொடிக்கு 2.5 பைசா, டேட்டா 10 எம்பி வேலிடிட்டி 28 நாட்கள். ரூ.35க்கு டாக்டைம் ரூ.26. அழைப்பு கட்டணம் ரூ.60 பைசாவும், டேட்டா 100 எம்பி, வேலிட்டி 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.
ரூ.65க்கு டாக்டைம் ரூ65ம் நிமிடத்திற்கு 30 பைசாவும் 200 எம்பியும் 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. ரூ. 95க்கு ரூ.95 டாக்டைம், அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசா, 500 எம்பி 28 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.
ரூ.145க்கு டாக்டைம் ரூ.145ம் அழைப்பு கட்டணம் நிமிடத்திற்கு ரூ. 30 பைசாவும் 1 ஜி.பியும் 42 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. ரூ245க்கு ரூ.245ம் அழைப்புக்கு கட்டணம் நிமிடத்திற்கு 30 பைசாவும் 2 ஜிபியும் 84 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது.

பயன்பெரும் வட்டாரங்கள்:
இந்த சலுகை அறிவிப்பு முதல் கட்டமாக சென்மை மற்றம் தமிழ்நாடு வட்டாரங்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற வட்டாரங்களுக்கு அறிவிப்பு வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications