Home
News

ஓஹோனு வோடபோன்! வேற ப்ரீபெய்ட் பிளானே வேணாம்! இந்த புது பிளான் போதும்!

என்னதான், ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) நிறுவனங்களோடு போட்டிப்போட முடியாமல், தவித்தாலும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சலுகைகளை சும்மானு சொல்லிவிட முடியாது. இப்போது, வந்திருக்குமொரு புதிய அன்லிமிடெட் திட்டம், விஐ (VI) வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் ஆகிய இரண்டும், நாடு முழுவதும் போட்டிப் போட்டுக் கொண்டு 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஆனால், இவற்றின் போட்டி நிறுவனமான வோடபோன் ஐடியா 5ஜி சேவை குறித்த அறிவிப்பை கூட வெளியிடவில்லை.

ஓஹோனு வோடபோன்! வேற ப்ரீபெய்ட் பிளானே வேணாம்! இந்த புது பிளான் போதும்!

இதனால், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் வேறு சிம் கார்டுகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். சொல்லப்போனால், லட்சணக்கான வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதையே மறந்துவிட்டனர் என்பதே உண்மை. இப்படி படிப்படியாக தனது வாடிக்கையாளர்கள் குறைகிறார்கள் என்பதை அறிந்த வோடபோன் நிறுவனம், "பொறுத்தது போதும் பொங்கியெழு" என்பது போல லாபத்தை பார்க்காமல், வாடிக்கையாளர்களுக்காக அசத்தலான திட்டத்தை அறிவிக்க தொடங்கியிருக்கிறது.

அந்த வகையில், இப்போது 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அசத்தாலான புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டம் ஒடிடி (OTT) சப்கிரிப்ஷன், அன்லிமிடெட் டேட்டா, பின்ச் ஆல்-நைட், வீக்கெண்ட் ரோலோவர் என பல்வேறு சலுகைகளை கொண்டுள்ளது. வரும் காலங்களில் விஐ வாடிக்கையாளர்களில், பெரும்பாலானோர், இந்த திட்டத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வோடபோன் ஐடியா ரூ.902 பிளான் விவரங்கள்: இந்த பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. நாளொன்றுக்கு 2 ஜிபி (2GB) டேட்டா, 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் கால்ஸ் (Unlimited Calls) வழங்கப்படுகிறது. இந்த திட்டம் மூலம் 90 நாட்களுக்கான சன்நெக்ஸ்ட் சப்கிரிப்ஷன் (SunNxt Subscription) வழங்கப்படும்.

இந்த சன்நெக்ஸ்ட் ஓடிடி (OTT) தளத்தின் வருடாந்திர பேஸிக் (Basic) பிளானின் விலை ரூ.480 ஆகவும், பிரீமியம் (Premium) பிளானின் விலை ரூ.799 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த விஐ ரூ.902 பிளான் மூலம் 3 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. அதேபோல விஐ மூவிஸ் மற்றும் டிவி (Vi Movies and TV) ஆப்பையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இதுமட்டுமல்லாமல், வியாகாம்18 (Viacom18), ஜீ5 (ZEE5), ஹங்கமா (Hungama), டிஸ்கவரி (Discovery), யூப் டிவி (Yupp TV) ஆகிய பிளாட்பார்ம்களையும் பயன்படுத்திக்கொள்ள முடியும். விஐ மூலம் வழங்கப்படும், பின்ச் ஆல்-நைட் (Binge All-Night) மற்றும் வீக்கெண்ட் ரோலோவர் (Weekend Rollover) சலுகைகளும் இந்த பிளானில் வழங்கப்படும். அதன்படி, இரவு 12 முதல் காலை 6 மணி வரையில் அன்லிமிடெட் இன்டர்நெட் டேட்டா கிடைக்கும்.

அதேபோல, திங்கள் முதல் வெள்ளி வரையில் தினசரி 2ஜிபி டேட்டாவை பயன்படுத்தாமல் விட்டிருந்தால், அதை சனி மற்றும் ஞாயிறுகளில் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு 2 ஜிபி பேக்கப் டேட்டா மாதாமாதம் வழங்கப்படும். இதற்கு பணம் வசூலிக்கப்படாது. இந்த டேட்டாவை பெற 121249 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது விஐ ஆப்பை (Vi App) பயன்டுத்தலாம்.

இப்படி பல்வேறு சலுகைகள் இந்த ரூ 902 திட்டத்துக்கு வழங்கப்படுகிறது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launches New Unlimited Recharge Plan With Free OTT Subscription And 90 Days Validity, Here is Full Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X