Home
News

மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்த Vodafone Idea.. ஜியோஹாட்ஸ்டார், தினமும் 2ஜிபி டேட்டா, வாய்ஸ் கால்கள்!

ஐபிஎல் 2025 (IPL 2025) போட்டிகளை பார்க்க ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா தேவைப்படும் என்பதால் ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஓடிடி சந்தாவுடன் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே ஜியோஹாட்ஸ்டார் திட்டங்களை அறிமுகம் செய்த நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் ஜியோஹாட்ஸ்டார் சந்தா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.239, ரூ.399 மற்றும் 101 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கி உள்ளது. இப்போது இந்த மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களின் வேலிடிட்டி மற்றும் நன்மைகள் குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

மலிவு விலையில் திட்டங்களை அறிமுகம் செய்த Vodafone Idea..

வோடபோன் ஐடியா ரூ.239 திட்டம் (Vodafone Idea Rs 239 Prepaid Plan) ஆனது 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக ஒரு மாதம் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) இந்த திட்டம் மூலம் பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வோடபோன் ஐடியா ரூ.239 திட்டம் வழங்குகிறது. மேலும் 300 எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அழைப்பு நன்மைகள் மற்றும் OTT எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.

வோடபோன் ஐடியா ரூ.399 திட்டம் (Vodafone Idea Rs 399 Prepaid Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசாரஜ் செய்தால் மொத்தம் 56ஜிபி டேட்டா கிடைக்கும். ஒரு மாதம் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) இந்த திட்டம் மூலம் பெறமுடியும் .

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வோடபோன் ஐடியா ரூ.399 திட்டம் வழங்குகிறது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், நள்ளிரவு 12 மணி முதல் மதியம் 12 மணி வரையில் அன்லிமிடெட் டேட்டா, வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் சலுகை, டேட்டா டிலைட்ஸ் உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

Take a Poll

வோடபோன் ஐடியா ரூ.101 ப்ரீபெய்ட் திட்டம் (Vodafone Idea Rs 101 Prepaid Plan) ஆனது 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. குறிப்பாக இது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். அதேபோல் 5ஜிபி டேட்டா நன்மை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த திட்டம் மூன்று மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை (JioHotstar subscription) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் மற்றும் அழைப்பு நன்மைகள் கிடைக்காது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது மும்பையில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் நாடு முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea launches new JioHotstar plans: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X