அடடா அட்டகாசம்., வாட்ஸ்அப்பில் இப்படி ஒரு அம்சமா?- வோடபோன் ஐடியா வாடிக்கையாளரா நீங்கள்!

|

வோடபோன் ஐடியா (விஐ) நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அம்சத்தை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக ரீசார்ஜ் செய்வதற்கான அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களுக்கு எளிமையான டிஜிட்டல் கட்டணங்களை மேற்கொள்வதற்கான அனுபவத்தை வழங்குகிறது.

வோடபோன் ஐடியா லிமிடெட் டிஜிட்டல் கட்டண சேவை

வோடபோன் ஐடியா லிமிடெட் டிஜிட்டல் கட்டண சேவை

வோடபோன் ஐடியா லிமிடெட் டிஜிட்டல் கட்டண சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப் மூலம் கட்டணம் செலுத்தி ரீசார்ஜ் செய்யலாம் என தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப் தளத்தை போன்றே அனைத்து யூபிஐ இயங்குதளத்தின் மூலம் பரிவர்த்தனை செய்யலாம்.

வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்தலாம்

டிஜிட்டல் சேவையானது வாட்ஸ்அப் மூலம் பணம் செலுத்துவதற்கும் ரீசார்ஜ் செய்வதற்கும் அனுமதிக்கிறது. போஸ்ட்பெய்ட் மற்றும் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஆகிய இருவருக்குமே வோடபோன் ஐடியாவின் இந்த வசதி கிடைக்கிறது. அதேபோல் இந்த வசதியை இரண்டே கிளிக்குகளில் உடனடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

எளிமையான மற்றும் வேகமான டிஜிட்டல் தளம்

இந்த தளமானது எளிமையான மற்றும் வேகமான டிஜிட்டல் தளங்களை கொண்டு வருகிறது. வோடபோன் ஐடியா வாட்ஸ்அப்பில் சேவை சாட்போட் அம்சத்தை கொண்டு வந்தது. இதன்மூலம் பில் செலுத்துதல், ரீசார்ஜ், திட்டம் செயல்படுத்தல், புதிய இணைப்பு, டேட்டா இருப்பு, பில் கோரிக்கைகள் உள்ளிட்ட பல சேவைகளை பெற வாடிக்கையாளர்களை அனுமதித்தது.

எளிய வழிமுறைகளில் ரீசார்ஜ் செய்யலாம்

இந்த அம்சத்தின் மிகப்பெரிய பயன் என்று பார்த்தால் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்ய மிக எளிய வழிமுறைகளை மட்டுமே கையாண்டால் போதும் என்பதாகவும். இது பயன்படுத்த எளிதானது மற்றும் பாதுகாப்பானது ஆகும். செயற்கை நுண்ணறிவின் சக்தியை மேம்படுத்துவதன் மூலம் விஐ உடன் வாடிக்கையாளர்கள் உரையாடல் மேற்கொள்ளலாம்.

எப்போது உலகம் சகஜ நிலைக்கும் திரும்பும்? பில் கேட்ஸ் முக்கிய தகவல்.!எப்போது உலகம் சகஜ நிலைக்கும் திரும்பும்? பில் கேட்ஸ் முக்கிய தகவல்.!

வாட்ஸ்அப் எண்ணுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்

ரீசார்ஜ் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கையில், 9654297000 என்ற எண்ணை தங்களது ஸ்மார்ட்போனில் சேமித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த எண்ணை வாட்ஸ்அப்பில் திறந்து how to pay bills என டைப் செய்து மெசேஜ் அனுப்ப வேண்டும். இந்த மெசேஜ் அனுப்பியவுடன் நிறுவனம் தரப்பில் பல்வேறு வழிமுறைகள் விருப்பங்கள் அனுப்பப்படும்.

ஒரே எண் மூலம் விருப்பத்தை தேர்வு செய்யலாம்

அந்த விருப்பங்களோடு நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செய்யும் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா அல்லது வேறு எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா என கேள்வி கேட்கப்படும். நீங்கள் வாட்ஸ்அப் எண்ணிற்கு ரீசார்ஜ் செய்ய விரும்புகிறீர்கள் என்றால் அதற்கு 1 என்ற எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டுமானும், வேறு எண்ணுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற பட்சத்தில் 2 என டைப் செய்து பதிலளிக்க வேண்டும்.

திட்டத்தை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்

போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் நேரடியாக பணம் செலுத்துவதற்கான விருப்பங்கள் காண்பிக்கப்படும். அதேபோல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் How to recharge my number என டைப் செய்து அனுப்ப வேண்டும். அதில் ரீசார்ஜ் திட்டதேர்வுகள் காட்டப்படும் அதை கிளிக் செய்து தேர்வு செய்ய வேண்டும். பின் பணம் செலுத்துவற்கான பல விருப்பங்கள் காட்டப்படும். இந்த இணைப்பை தேர்வு செய்து ரீசார்ஜ் கட்டணத்தை செலுத்தி ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launches its New Payment Service: Now Customer Can Recharge Via Whatspp

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X