1 ரூபாய்க்கு ரீசார்ஜ்.. Jio-வை ஓவர்டேக் செய்த Vodafone Idea.. அம்பானியே ஆடிபோய்ட்டார்.. அப்படி என்ன நன்மை?
அம்பானிக்கே (Ambani) தோன்றாத ஐடியாவை வோடபோன் ஐடியா (Vodafone Idea) செய்துள்ளது. வெறும் 1 ரூபாய்க்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Rs 1 Prepaid Plan) அறிமுகம் செய்து ஒட்டுமொத்த டெலிகாம் பயிர்களின் கவனத்தை இப்போது விஐ (VI) நிறுவனம் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் மூன்றாவது பெரிய டெலிகாம் (Telecom) நிறுவனமாக விஐ என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. டெலிகாம் துறையில் நடைபெறும் கடுமையான போட்டிக்கு இடையில் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் முறையே முதல் இரண்டு இடத்தை தக்கவைத்து வருகின்றன. இதற்கு அடுத்தபடியாக வோடபோன் ஐடியா மூன்றாவது நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. விஐ அதன் பயனர்களுக்கு பல சுவாரசியமான திட்டங்களை வழங்கி வருகிறது.

வெறும் 1 ரூபாய்க்கு ரீசார்ஜ் திட்டமா? ஜியோவை ஓவர்டேக் செய்த விஐ ரூ. 1 பிளான் (Vi Rs 1 Plan):
அந்த வரிசையில், இதுவரை எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் செய்யாத ஒரு செயலை தற்போது வோடபோன் ஐடியா செய்துள்ளது. இந்திய வரலாற்றில், 2024 ஆம் ஆண்டில் முதல் முறையாக வெறும் 1 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை விஐ (Vi Rs 1 Prepaid Plan) நிறுவனம் அறிமுகம் செய்து மக்களை வியப்படைய செய்துள்ளது. 1 ரூபாய்க்கு ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்கலாம் என்ற ஐடியா இன்று வரை அம்பானிக்கே தோன்றவில்லை.
ஆனால் வோடபோன் ஐடியா இந்த திட்டத்தை மக்களுக்காக அறிமுகமே செய்துவிட்டது. 1 ரூபாய்க்கு என்ன பெரிய நன்மை கிடைக்கபோகிறதென்று உங்களில் சிலர் அலட்சியமாக கேட்கலாம் அல்லது சிலர் சந்தேகமாக கூட கேட்கலாம். 1 ரூபாய் பிளானில் வோடபோன் ஐடியா (Vodafone Idea Rs 1 Plan) என்ன நன்மையை வழங்குகிறது? இந்த திட்டம் யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதை எப்படி ரீசார்ஜ் செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.
வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ள இந்த புதிய விஐ ரூ. 1 திட்டம் (Vodafone Idea Rs 1 Plan) 1 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 75 பைசா (Paise) மதிப்பிளனா டாக் டைம் நன்மையை தருகிறது. 75 பைசா டாக் டைம் (75 Paise Talktime Benefits) வைத்து என்ன செய்ய முடியும் என்று சிலர் கேலியாக கேட்கலாம்.

இந்த 75 பைசா டாக் டைம் நன்மையை வைத்து மக்கள் அவசர நேரத்தில் மிஸ்டு கால் (Missed call) கொடுத்து, அவர்கள் தொடர்புகொள்ள விரும்பும் நபர்களுடன் இணைப்பிலிருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக, வோடபோன் ஐடியா பயனர்களில் ரூ. 99, ரூ. 198 அல்லது ரூ. 204 ரீசார்ஜ் திட்டங்களை (Vodafone Idea Recharge Plans) ரீசார்ஜ் செய்த பயனர்கள் இந்த 1 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.
இந்த மூன்று திட்டங்களும் லிமிடெட் டாக்டைம் நன்மையுடன் வருகிறது. இந்த திட்ட பயனர்களின் ஒட்டுமொத்த டாக் டைம் நிறைவடையும் பொழுது, இந்த 1 ரூபாய் திட்டத்தை ரீசார்ஜ் செய்து 75 பைசா டாக்டைம் மற்றும் 1 ஆன்-நெட் நைட் மினிட் (one on-net night minute) நன்மையையும் உங்களால் பெறமுடியும். ஒருவேளை உங்கள் மிஸ்டு கால் அழைப்பை யாராவது ஏற்றுவிட்டால், இந்த 1 ரூபாய் நன்மை அப்போதே முடிந்துவிடுமென்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலேயே மிகவும் குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ஒரே திட்டம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் இப்போது பல வட்டங்களில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. வோடபோன் ஐடியா ஆப்ஸ் மூலம் இந்த திட்டத்தை வடிக்கையாளர்கள் இப்போது ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








