தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 30 நாட்கள் வேலிடிட்டி தரும் 2 திட்டங்களை அறிமுகம் செய்த Vodafone Idea.!
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. ஆனாலும் இந்நிறுவனம் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை வழங்காதது மிகப் பெரிய குறையாக இருக்கிறது. தற்போது ஜியோ, ஏர்டெல் நிறுவனங்கள் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை வழங்கிவிட்டன.
வோடபோன் ஐடியா நிறுவனமும் இந்தியா முழுவதும் 5ஜி சேவையைக் கொண்டுவந்தால் இன்னும் அருமையாக இருக்கும். இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.368 மற்றும் ரூ.369 ப்ரீபெய்ட் திட்டங்களைத் தான் வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.368 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், SunNxt ஆப் அணுகல், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியாவின் ரூ.368 ப்ரீபெய்ட் திட்டம்.
வோடபோன் ஐடியா ரூ.369 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், SonyLiv, தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night வசதி, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா, Data Delight சலுகை உள்ளிட்ட பல நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். அதேபோல் 2ஜிபி பேக்கப் டேட்டாவை வழங்குகிறது வோடபோன் ஐடியாவின் ரூ.369ப்ரீபெய்ட் திட்டம்.
SonyLiv மற்றும் SunNxt சந்தாக்களைத் தவிர ரூ.368 மற்றும் ரூ.369 ப்ரீபெய்ட் பேக்குகளுக்கு இடையே பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். மேலும் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் சில அசத்தலான திட்டங்களை இப்போது பார்ப்போம்.

வோடபோன் ரூ.129 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தற்போது அதிக டேட்டா மற்றும் பொழுதுபோக்கு தரவுகளை வழங்குகின்றன. அதாவது நீங்கள் இப்போது வோடபோன் ஐடியா ரூ.129 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் காலிங், 200 எம்பி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் பலன்கள் எதுவும் வழங்கப்படவில்லை.
வோடபோன் ஐடியா ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 50ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகின்றன. மேலும் வி திரைப்படங்கள் மற்றும் டிவி, பிரீமியம் திரைப்படங்கள்,
ஒரிஜினல்ஸ் , செய்திகள் மற்றும் நேரலை டிவி போன்ற பலன்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற சில நன்மைகள் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ், Binge All Night, வீக் எண்ட் டேட்டா ரோல் ஓவர் வசதி, Vi மூவிஸ் மற்றும் டிவியின் இலவச சந்தா போன்ற பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன. குறிப்பாக வோடபோன் ஐடியா ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.


Click it and Unblock the Notifications








