வோடபோனின் ரூ.251 திட்டம் அறிமுகம்.! எவ்வளவு டேட்டா? எத்தனை நாள் வேலிடிட்டி?
வோடபோன் ஐடியா நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு போட்டியாக தொடர்ந்து பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் செய்யும் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு பயன்படும் வகையில் தான் இருக்கிறது.

அதன்படி வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள ஒரு திட்டம் தான் ரூ.251 டேட்டா வவுச்சர். இதன் நன்மைகள் என்ன? வேலிடிட்டி, மற்றும் இதில் கிடைக்கும் சலுகைகள் என்னென்ன? என்பதை பற்றிய தெளிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.251 டேட்டா வவுச்சர் நன்மைகள்
வழக்கமான வவுச்சரை போலவே வோடபோன் ஐடியாவிலிருந்து ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.251 டேட்டா வவுச்சர் ஆனதுதடையற்ற டேட்டா அனுபவத்தை பெற விரும்பும் பயனர்களின் ஆக்டிவ் திட்டத்தின் டேட்டா பேலன்ஸ் உடன் கூடுதல் டேட்டாவை சேர்க்க உதவும். இந்த திட்டம் 50ஜிபி அளவிலான கூடுதல் டேட்டா வசதியுடன் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது.

குறிப்பாக வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.251 டேட்டா வவுச்சர் ஆனது - பீகார், சென்னை, குஜராத், ஹரியானா, கேரளா, தமிழ்நாடு (சென்னை தவிர), மற்றும் உ.பி. கிழக்கு உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களில் மட்டுமே கிடைக்கிறது.

அதேசமயம் டெல்லி, அசாம், ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம்,ஜம்மு-காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கோவா, மத்தியப் பிரதேசம், மும்பை, வடகிழக்கு, ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உ.பி. மேற்கு மற்றும் மேற்கு வங்கம் போன்ற வடங்களில் விலக்கப்பட்டுள்ளன.

அன்மையில் வோடபோன் ஐடியா அதன் ரூ.98 தரவு வவுச்சரில் டபுள் டேட்டா நன்மையை அறிவித்தது. அதன்படி வோடபோன் ஐடியாரூ.98-வுவச்சரில் 6ஜிபி டேட்டா மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது 12ஜிபி அளவிலான வரம்பற்ற டேட்டாவைவழங்குகிறது.இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ வழங்குகிறது.

அதேபோல் வோடபோன் ஐடியாவின் ரூ.16-வவுச்சர் ஆனது 1ஜிபி அளவிலான டேட்டாவை 24மணிநேரம் வழங்குகிறது. பின்பு ரூ.48 வவுச்சர்ஆனது 3ஜிபி அளவிலான வரம்பற்றடேட்டாவை வழங்குகிறது, இதன் செல்லுபடியாகும் காலம் 28நாட்கள் ஆகும்.

ஜியோ நிறுவனமும் ரூ.251 வொர்க் ஃப்ரம் ஹோம் திட்டத்தை சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது, இது 50ஜிபி அளவிலானடேட்டா நன்மைகளுடன் எந்த விதமான வாய்ஸ் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளும் இல்லமால் வருகிறது. இந்ததிட்டம் 30நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது.

ஏர்டெல் நிறுவனமும் ரூ.251 டேட்டா வவுச்சரை வைத்துள்ளது,அதன்படி இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு50ஜிபி அளவிலான டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த இந்த வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் வாடிக்கையாளர்களிடம் இருக்கும் அடிப்படை திட்டத்தின் மீது ஒற்றுப்போகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








