வோடபோனின் 2 புதிய பிளான்கள்.. ரூ.24க்கு அன்லிமிடெட் டேட்டா.. ரூ.49க்கு ஒருநாள் டேட்டா.. ஆனால், ஒரு கண்டிஷன்!
வோடபோன் ஐடியா நிறுவனம் 2 புதிய டேட்டா பிளான்களை அறிமுகம் செய்துள்ளது. அதில் ரூ. 24 பிளான் அன்லிமிடெட் டேட்டா சலுகையையும், ரூ. 49 பிளான் 24 மணி நேர டேட்டா சலுகையையும் கொடுக்கிறது. இந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் இதோ.
ஜியோ, ஏர்டெல் போன்ற போட்டி டெலிகாம் நிறுவனங்களுக்கு நிகராக போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் பிளான்களை கொடுக்க வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. நாளுக்குநாள் வோடபோன் வாடிக்கையாளர்கள் வேறு சிம் கார்டுகளுக்கு மாறுவதால், லாபத்தை பார்க்காமல் சலுகைகளை வழங்க முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஏனென்றால், 5ஜி சேவையை வழங்கும் வரையில், வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்களை கட்டிக்காக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் மலிவு விலை பிளான்களை அதிரடியாக அறிவித்து அசத்தி வருகிறது. முன்னதாக, ரூ.17 மற்றும் ரூ.57 ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து அசத்தியது.
இந்த திட்டங்கள் நல்ல வரவேற்பை பெற்றதால், இப்போது ரூ.24 (VI Rs 24 Plan) மற்றும் ரூ.49 (VI Rs 49 Plan) டேட்டா பிளான்களை அறிவித்துள்ளது. இந்த பிளான்களுக்கு முறையே விஐ சூப்பர் ஹவர் பிளான் (Vi Super Hour Plan), விஐ சூப்பர் டே பிளான் (Vi Super Day Plan) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
வோடபோன் ஐடியா ரூ. 24 பிளான் விவரங்கள்: இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்குள் எவ்வளவு டேட்டாவை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஏற்கனவே, நீங்கள் செய்திருக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் அடிப்படையில், இன்டர்நெட் வேகம் இருக்கும். இதன்மூலம் தேவைப்படும்போது, அன்லிமிடெட் டேட்டாவை பெறமுடியும்.
வோடபோன் ஐடியா ரூ. 49 பிளான் விவரங்கள்: இந்த பிளான் 24 மணி நேரம் அதாவது ஒரு நாள் முழுக்க வேலிடிட்டி கொண்டதாகும். இந்த பிளானை ரீசார்ஜ் செய்தால், 6 ஜிபி டேட்டா டாப் அப் கிடைக்கும். ஏற்கனவே, நீங்கள் செய்திருக்கும் ரீசார்ஜ் திட்டங்களின் அடிப்படையில், இன்டர்நெட் வேகம் மாறுபடும். இந்த 2 புதிய பிளான்களிலும் கால், எம்எம்எஸ் சலுகைகள் கிடையாது.
இந்த பிளான்கள் வீடியோ ஸ்ட்ரீமிங், மியூசிக் பிளே, கேம்ஸ் ஆகியவற்றுக்கு உகந்ததாக இருக்கும். அந்த வகையில், விஐ மூவிஸ் & டிவி (Vi Movies & TV) ஆப்பில், இலவசமாக வீடியோக்களை பார்க்கவும், இந்த பிளான்களை பயன்படுத்தலாம். இதேபோல பல்வேறு புதிய பிளான்களை வோடபோன் ஐடியா அடுத்தடுத்த அறிமுகம் செய்ய உள்ளது.
அடுத்த சில மாதங்களில் 5ஜி சேவையை வழங்க உள்ளது. டெல்லி மற்றும் புனேவில் முதலில் சேவைகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








