ஜியோவிற்கு பதிலடி: வோடபோனின் இரண்டு அட்டகாசமான திட்டங்கள் அறிமுகம்.! முழுவிபரங்கள்.!
ஜியோ நிறுவனம் அன்மையில் தனது தனது ரூ.149 மற்றும் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்தது. குறைந்த விலையில் தனது பயனர்களுக்குச் சேவையை வழங்க இந்த திட்டங்களை மீண்டும் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதற்கு போட்டி கொடுக்கும் வகையில் வோடபோன் நிறுவனம் இப்போது அருமையான இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் நிறுவனம்
வோடபோன் நிறுவனம் தற்சமயம் அறிமுகம் செய்த திட்டம் என்னவென்றால் ரூ.219 மற்றும் ரூ.449 பீரிப்பெய்ட் திட்டங்கள்ஆகும். கண்டிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் மக்களுக்கு பயன்படும் வகையில் வெளிவந்துள்ளது என்று தான்
கூறவேண்டும்.

வோடபோன் ரூ.219-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் இப்போது அறிமுகம் செய்துள்ள ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள்,தினசரி 1ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி28நாட்கள் ஆகும்.

வோடபோன் ரூ.449-ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் அறிமுகம் செய்துள்ள ரூ.449 ப்ரீபெய்ட் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா, 100எஸ்எம்எஸ் உள்ளிட்ட சலுகைகளை வழங்கியுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56நாட்கள் ஆகும்.

ஐடியா நிறுவனம்
ஐடியா செல்லுலார் வாடிக்கையாளர்களும் இதே ரூ.219 மற்றும் ரூ.449 பீரிப்பெய்ட் திட்டங்களைப் பெறலாம், மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து சலுகைகளும் ஐடியா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 1ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, தினமும் 100 எஸ்.எஸ்.எஸ், ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசம் மற்றும் 300 FUP லிமிட் பொருந்திய மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கான நிமிடங்கள் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. FUP லிமிட் முடிந்த பின், மற்ற நெட்வொர்க் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா என்று
வசூலிக்கப்படும்.

ஜியோ ரூ.98 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோவின் ரூ.98 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு ஒட்டுமொத்தமாக 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஜியோ - ஜியோ அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது மற்றும் மற்ற நெட்வொர்க்கு அழைப்புகளுக்கான IUC டாக் டைம் திட்டங்களைப் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். இந்த திட்டம் மற்ற திட்டத்தை போல் 28 நாட்கள் வேலிடிட்டி இல்லாமல், வெறும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications