Home
News

Vodafone Idea அறிமுகம் செய்த ரூ.19 திட்டம்.. என்னென்ன நன்மைகள்? வேலிடிட்டி?

ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அவ்வப்போது புதிய புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது வோடபோன் ஐடியா நிறுவனம். குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் மலிவு விலையில் அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது.

அதேபோல் இன்னும் 6 மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் இந்தியாவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது தற்போது ரூ.19 திட்டத்தை தான் அறிமுகம் செய்துள்ளது இந்நிறுவனம். இந்த திட்டங்களின் நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

Vodafone Idea அறிமுகம் செய்த ரூ.19 திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

வோடபோன் ஐடியா ரூ.19 திட்டம் (Vodafone Idea Rs 19 Plan) ஆனது ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இந்த திட்டத்தில் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 1ஜிபி டேட்டா கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் ஆகும். ஆனால் வோடபோன் ஐடியா ரூ.19 திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் தான் ரூ.49 திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டமும் 1 நாள் தான் வேலிடிட்டி கொடுக்கும். நீங்கள் இந்த ரூ.49 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 20ஜிபி டேட்டா நன்மை உள்ளது. அதேபோல் இந்த திட்டமும் ஒரு டேட்டா வவுச்சர் தான். எனவே இதில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகள் கிடைக்காது. மேலும் இந்நிறுவனம் வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

Vodafone Idea அறிமுகம் செய்த ரூ.19 திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கிறது. அதேபோல் ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஆனால் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அதேபோல் வோடபோன் ஐடியா ரூ. 601 ப்ரீபெய்ட் திட்டத்தில் பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர்(Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV), 16ஜிபி போனஸ் டேட்டா உள்ளிட்ட பல நன்மைகள் வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Vodafone Idea அறிமுகம் செய்த ரூ.19 திட்டம்.. என்னென்ன நன்மைகள்?

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.901 ப்ரீபெய்ட் திட்டம் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்கும். தினசரி 3ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் 48ஜிபி போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஒரு வருடத்திற்குச் செல்லுபடியாகும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா சந்தா, பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) உள்ளிட்ட பல நன்மைகள் இதில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.1066 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா வழங்கப்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் 1 வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் (Disney+ Hotstar Mobile) சந்தா, பிங்கே ஆல் நைட் (Binge All Night), வீக்கெண்ட் டேட்டா ரோலோவர் (Weekend Data Rollover), விஐ மூவீஸ் & டிவி (Vi Movies & TV) உள்ளிட்ட நன்மைகள் இதில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea launched Rs.19 plan: Check validity, benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X