என் பொழப்புல மண்ணள்ளி போட்டீயே.. இனி Vodafone-ஐ விட்டு எந்த கஸ்டமரும் வெளிய போக மாட்டாங்க.. ஏன்னா?
இனிமேல் ஒருத்தர் கூட வோடபோன் ஐடியா (Vodafone Idea) நெட்வொர்க்கை விட்டு வெளியே போக முடியாதபடி.. ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற மற்ற டெலிகாம் ஆப்ரேட்டர்கள் தான் நல்ல-நல்ல திட்டங்களை வழங்குகின்றன என்று சொல்ல முடியாதபடி விஐ (VI) நிறுவனமானது ஒரு தரமான வேலையை பார்த்துள்ளது.
ஒட்டுமொத்த இந்தியாவும் 5ஜிக்கு மாறுகிறது. ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) போன்ற நிறுவனங்கள் சுமார் 3000 நகரங்களில் தத்தம் 5ஜி சேவைகளை (5G Service) அறிமுகம் செய்துவிட்டனர். மேலும் 2023 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் 5ஜி அறிமுகமாகி இருக்கும்.

இருப்பினும் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் இந்த நொடி வரையிலாக 5ஜி சேவைகள் பற்றிய அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். மேலும் பல விஐ கஸ்டமர்கள் சிறந்த மொபைல் நெட்வொர்க் மற்றும் சிறந்த திட்டங்களுக்காக மற்ற நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றன; மாறலாமா என்கிற யோசனையில் உள்ளனர்.
இதற்கிடையில் தான், தனது வாடிக்கையாளர் தளத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கத்தின் கீழ் வோடபோன் நிறுவனம் 3 புதிய திட்டங்களை செய்துள்ளது. அவைகள் ரூ.17, ரூ.57 மற்றும் ரூ.1999 திட்டங்களாகும். இந்த 3 திட்டங்களின் கீழ் என்னென்ன நன்மைகள் (Benefits) கிடைக்கும்? இந்த திட்டங்களின் வேலிடிட்டி (Validity) என்ன? இதோ விவரங்கள்:
வோடபோன் ஐடியா ரூ.17 திட்டத்தின் நன்மைகள்: இது வோடாபோன் ஐடியாவின் வவுச்சர் (Voucher) பட்டியல்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒரு பட்ஜெட் விலை திட்டமாகும். இது மதியம் 12 மணி முதல் காலை 6 மணி வரையிலாக அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) வழங்குகிறது.
இருப்பினும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி வெறும் 1 நாள் மட்டுமே ஆகும். மேலும் அன்லிமிடெட் டேட்டாவை தவிர்த்து ரூ.17 ரீசார்ஜ்ஜின் கீழ் வேறு எந்த நன்மைகளும் கிடைக்காது. அதாவது இதன் கீழ் அவுட்கோயிங் கால்கள் (Outgoing Calls), எஸ்எம்எஸ் (SMS) போன்ற எந்த நன்மையும் கிடைக்காது. இது முழுக்க-முழுக்க வரம்பற்ற டேட்டா தேவையை கொண்டவர்களுக்கான திட்டமாகும்.
வோடபோன் ஐடியா ரூ.57 திட்டத்தின் நன்மைகள்: இதுவும் ஒரு ப்ரீபெய்ட் வவுச்சர் (Prepaid Voucher) ஆகும். மேலும் ரூ.17 திட்டத்தின் கீழ் கிடைக்கும் அதே நன்மைகளை வழங்குகிறது. ஆனால் இதன் வேலிடிட்டி 7 நாட்கள் அல்லது 1 வாரம் ஆகும். அதாவது இந்த பேக் மொத்தம் 168 மணி நேரம் செல்லுபடியாகும்.
வோடபோன் ஐடியா ரூ.1999 திட்டத்தின் நன்மைகள்: இதுவொரு ப்ரீபெய்ட் அன்லிமிடெட் பேக் (Prepaid Unlimited Pack) ஆகும். இதன் கீழ் அன்லிமிடெட் கால்கள் (Unlimited Calls), தினமும் 1.5 ஜிபி டேட்டா (1.5 GB Daily Data), ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்கள் (Free SMS) போன்ற நன்மைகள் கிடைக்கும்.
1.5ஜிபி என்கிற டேட்டா லிமிட் தீர்ந்த பின்னர் 64Kbps இன்டர்நெட் ஸ்பீடின் கீழ் அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். மேலும், தினசரி இலவச எஸ்எம்எஸ் லிமிட்டை மீறிவிட்டால், அதன் பின்னர் அனுப்பப்படும் லோக்கல் எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ.1 மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ் ஒன்றுக்கு ரூ1.50 பைசா வசூலிக்கப்படும். இந்த திட்டம் 250 நாட்கள், அதாவது சுமார் 8 மாதங்கள் என்கிற வேலிடிட்டி உடன் வருகிறது.


Click it and Unblock the Notifications