Home
News

TRAI ஐயா நீங்க சொன்னதை செஞ்சுட்டோம்.. Vi ரிலீஸ் செய்த புது திட்டங்கள்.. இனி டேட்டா இல்லை.. குஷியில் மக்கள்..

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) சமீபத்தில் வெளியிட்ட புதிய விதிமுறையான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட (Voice and SMS only prepaid plan) நடைமுறையின் கீழ் விஐ (Vi) என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை TRAI விதிமுறைக்கு உட்பட்டு அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை மற்றும் நன்மை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

டெலிகாம் வாடிக்கையாளர்கள் மேல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டேட்டா நன்மையை வலுக்கட்டாயமாக திணிப்பதாக கூறி எழுந்த புகாரின் பெயரில் TRAI, இந்தியாவில் உள்ள அணைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் டேட்டா நன்மை இல்லாமல் (no data included recharge plans), வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையை மட்டும் வழங்கும் ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வெளியிட வேண்டுமென்று TRAI உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அவற்றின் திட்டங்களை வெளியிட்டன.

TRAI ஐயா நீங்க சொன்னதை செஞ்சுட்டோம்.. Vi ரிலீஸ் செய்த புது திட்டங்கள்

TRAI ஐயா நீங்க சொன்னதை செஞ்சுட்டோம்.. Vi ரிலீஸ் செய்த புது திட்டங்கள்:

இந்த வரிசையில் தற்போது வோடபோன் ஐடியா நிறுவனமும் பின்தொடர்ந்துள்ளது. விஐ நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களின் (Vi voice and SMS only plans) விபரங்களை தெரிந்துகொள்ளலாம். ​​Vi நிறுவனம் தற்போது தனது வலைத்தளத்தில் விஐ ரூ.1460 திட்டத்தை (Vi Rs 1460 Plan) பட்டியலிட்டுள்ளது. இந்த திட்டம் 270 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டியை (Vi 270 days validity voice and SMS plan) வழங்குகிறது.

இதன் செல்லுபடியாகும் காலத்திற்கு இந்த திட்டம் டேட்டா நன்மை எதுவுமின்றி. 100 SMS உடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் அழைப்பு (unlimited voice call) நன்மையை வழங்குகிறது. 100 எஸ்எம்எஸ் ஒதுக்கீட்டை பயன்படுத்திய பிறகு, உள்ளூர் SMS-க்கு ரூ.1 மற்றும் STD SMS-க்கு ரூ.1.5 என்று கட்டணம் வசூலிக்கப்படும். டேட்டா நன்மை தேவைப்படாத வாடிக்கையாளர்கள் இனி 270 நாட்களுக்கு அழைப்பு சேவையை தடையின்றி இந்த திட்டத்தின் மூலம் பயன்படுத்தலாம்.

270 நாட்களுக்கு அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் சேவை:

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் அறிமுகம் செய்துள்ள திட்டத்தை தாண்டி, இந்தியாவின் தலைசிறந்த பிரைவேட் டெலிகாம் நிறுவனங்களான (private telecom companies) ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) நிறுவனங்கள் என்ன மாதிரியான வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஒன்லி திட்டங்களை அதன் வடிக்கையாளர்களுக்காக வழங்கியுள்ளது என்று பார்க்கலாம். டிராய் (TRAI) விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜியோ நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு ரூ.458 மற்றும் ரூ.1958 திட்டத்தை வழங்கியுள்ளது.

ஜியோ ரூ.458 பிளான் (Jio Rs 458 Plan) மற்றும் ஜியோ ரூ.1958 பிளான் (Jio Rs 1958 Plan) ஆகிய இரண்டு திட்டங்களும் முறையை 84 நாட்கள் மற்றும் 365 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டியை வழங்குகிறது. மறுபுறம் இந்தியாவின் மிகப்பெரிய இரண்டாம் தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல் (Airtel) நிறுவனமும் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் வாய்ஸ் & SMS திட்டங்கள்:

ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஏர்டெல் ரூ.499 திட்டம் (Airtel Rs 499 Plan) மற்றும் ஏர்டெல் ரூ.1959 திட்டம் (Airtel Rs 1959 Plan) ஆகிய இரண்டு திட்டங்களை இப்போது வாய்ஸ் மற்றும் SMS ஒன்லி ரீசார்ஜ் பிரிவின் கீழ் வழங்கியுள்ளது. இந்த திட்டங்கள் முறையே 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோவின் 365 நாள் திட்டங்கள் மட்டும் தாராளமாக 3600 SMS நன்மைகளை வழங்குகின்றது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone Idea Launched New Vi Voice and SMS Only Prepaid Plan After New TRAI Rule
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X