2025-ல் Vodafone செய்த முதல் நல்ல காரியம்.. பழையபடி ரூ.210 க்கு இறங்கியது.. புதிய அன்லிமிடெட் நன்மையுடன்!
ஏர்டெல் (Airtel) மற்றும் ஜியோவை (Jio) தொடர்ந்து, மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, 2025 ஆம் ஆண்டு தொடங்கியதும் சத்தமில்லாமல் ஒரு வேலையை பார்த்துள்ளது. இந்நிறுவனம் பட்ஜெட் விலை வாசிகளை ஈர்க்கும் வண்ணம் மீண்டும் ரூ.210 க்கு இறங்கியுள்ளது.
அதாவது வோடாபோன் ஐடியாவானது சத்தமில்லாமல் ரூ.209 புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை (Vodafone Idea New Rs 209 Prepaid Plan) கொண்டு வந்துள்ளது. டேட்டா, வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் என எல்லா நன்மைகளையும் வழங்கும் இந்த திட்டம் ஏற்கனவே ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் ரூ.199 திட்டத்தை (Vodafone Idea Rs 199 Plan) விட ரூ.10 அதிகமான விலைக்கு வருகிறது.

ரூ.10 வித்தியாசத்தில் ரூ.209 திட்டம் மற்றும் ரூ.199 திட்டத்தின் பலன்கள் எப்படி வேறுபடுகிறது? கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலையில் இரண்டு திட்டங்களை ஏன் வழங்க வேண்டும்? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம். இவ்விரு திட்டங்களுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடு உள்ளது. அது - அன்லிமிடெட் காலர் ட்யூன்ஸ் (Unlimited Caller Tunes) நன்மையாகும்.
ரூ.209 திட்டத்தின் கீழ் நீங்கள் அன்லிமிடெட் அன்லிமிடெட் காலர் ட்யூன்களை பெறுவீர்கள். அதுவே ரூ.199 திட்டத்தில் நீங்கள் அதை பெறமாட்டீர்கள். இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் இது மட்டும் தான். ஒரு பயனர் தொடர்ந்து காலர் ட்யூனை மாற்ற விரும்பினால், ரூ.209 திட்டம் மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும். இல்லையெனில் ரூ.10 மலிவான ரூ.199 திட்டத்தை ரீசார்ஜ் செய்வதே நல்லது!
வோடாபோன் ஐடியா ரூ.209 திட்டத்தின் கீழ் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2ஜிபி அளவிலான மொத்த டேட்டா (2GB Total Data) மற்றும் 300 எஸ்எம்எஸ்களுடன் (300 SMS) வருகிறது. இந்த பேக்கின் சர்வீஸ் வேலிடிட்டி 28 நாட்கள் (28 Days Validity) ஆகும்.
இதைவிட ரூ.10 மலிவான ரூ.199 திட்டத்தின் நன்மைகளை பொறுத்தவரை, 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ரூ.209 திட்டத்தை ரீசார்ஜ் செய்வதற்கான தினசரி சராசரி செலவு Daily average cost) ரூ.7.46 ஆகும்; மறுகையில் உள்ள ரூ.199 திட்டத்திற்கு ரூ.7.11 செலவாகும்.
இதனால் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை என்பதும் உண்மைதான். ஒருவேளை உங்களுக்கு வெவ்வேறு வகையான காலர் ட்யூன்களை செட் செய்வதன் மீது ஆர்வம் இருந்தால் ரூ.209 திட்டத்தை ரீசார்ஜ் செய்து, வரம்பற்ற கால்ர்டியூன்களை பெறுவதற்காக எக்ஸ்ட்ரா ரூ.10 அதிகம் செலவு செய்யலாம். இல்லை என்றால் ரூ.199 உடன் நிறுத்தி கொள்ளலாம்.
நீங்கள் இன்னும் கொஞ்சம் அதிக வேலிடிட்டியை வழங்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய விரும்பினால், வோடாபோன் ஐடியாவின் ரூ.218 திட்டத்தை (Vodafone Idea Rs 218 Plan) கருத்தில் கொள்ளலாம். இந்த திட்டம் மாதாந்திர சர்வீஸ் வேலிடிட்டியின் கீழ் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட்வாய்ஸ்கால்கள் மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது. ஒரு மாத வேலிடிட்டி என்பது அடுத்த மாதத்தின் அதே தேதி வரை நீங்கள் எந்த கவலையும் இல்லாமல் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம் என்று அர்த்தம்.
ஒருவேளை நீங்கள் இன்னும் அதிக வேலிடிட்டியை விரும்பினால் 40 நாட்களுக்கான சர்வீஸ் வேலிடிட்டியை வழங்கும் ரூ.289 திட்டத்தை (Vodafone Idea Rs 289 Plan) கருத்தில் கொள்ளலாம். இந்த திட்டத்தை பயன்படுத்துவதற்கான தினசரி சராசரி செலவு ரூ.7.23 ஆகும். கணக்கு போட்டு பார்த்தால், இது ரூ.209 திட்டத்தை பயன்படுத்துவதற்கான தினசரி செலவை காட்டிலும் குறைவாக உள்ளது.


Click it and Unblock the Notifications








