தீபாவளிக்காக Vodafone இறக்கிய புது 28 நாள் ரீசார்ஜ்.. 300GB டேட்டா, OTT, அன்லிமிடெட் வாய்ஸ்.. என்ன விலை?
இந்திய டெலிகாம் சந்தையில் மூன்றாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா லிமிடெட் (Vodafone Idea Limited) ஆனது அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் தொகுப்பின் கீழ் ஒரு புதிய திட்டத்தை சேர்த்துள்ளது. பொதுவாகவே வோடபோன் ஐடியாவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஆனது டேட்டா நன்மைகளின் அடிப்படையில் சிறந்தவைகளாக உள்ளன. இன்னும் சொல்லப்போனால் வி (Vi) அதன் திட்டங்களுடன் வழங்கும் டேட்டா சலுகைகள் ஆனது மற்ற தனியார் டெலிகாம் நிறுவனங்களுடன் ஒப்பிடமுடியாதவைகளாக உள்ளன
இதற்கிடையில் தான் ராஜஸ்தான் மற்றும் சில வட்டங்களில் ஒரு புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டெலிகாம்டால்க் (TelecomTalk) அறிக்கையின்படி, வோடாபோன் நிறுவனம் இந்த திட்டத்தை எல்லா இடங்களிலும் அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்கிறது. ஆக அடுத்த முறை ரீசார்ஜ் செய்யும் போது உங்கள் டெலிகாம் சர்க்கிளில் இது கிடைக்கிறதா என்பதை சரிபார்க்க மறக்காதீர்கள்.

நாம் இங்கே பேசுவது - வோடாபோன் ஐடியாவின் ரூ.419 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை (Vodafone Idea Rs.419 Prepaid Recharge Plan) பற்றித்தான். இது குறுகிய காலத்தில் அதிக டேட்டா நுகர்வை தேடும் மக்களை மையமாக கொண்ட ஒரு திட்டம் ஆகும். சுவாரசியமாக இந்த திட்டம் ஓடிடி (OTT) நன்மைகளையும் வழங்குகிறது.
வோடபோன் ஐடியா ரூ.419 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள் மற்றும் வேலிடிட்டி: வோடபோன் ஐடியாவின் ரூ.419 திட்டம் 28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி (28 Days Service Validity) உடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறைவாக உள்ளது, ஆனால் பயனர்கள் இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் டேட்டாவை (Unlimited Data) பெறுகிறார்கள்.
இங்கே அன்லிமிடெட் டேட்டா என்றால் - 28 நாட்களுக்கு 300 ஜிபி அதிவேக டேட்டா ஆகும். 300ஜிபி என்பது தான் ஹை ஸ்பீட் டேட்டா (300GB High Speed Data) லிமிட் ஆகும். அதன் பிறகு, பயனர்கள் தொடர்ந்து டேட்டா நன்மைகளை அனுபவிக்க முடியும், ஆனால் அது 100 கேபிபிஎஸ் என்கிற வேகத்தில் கூட வழங்கப்படாது.
டேட்டா நன்மை உடன் சேர்த்து வி ரூ.419 திட்டத்தின் கீழ் வரம்பற்ற வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் டெய்லி 100 இலவச எஸ்எம்எஸ்கள் ஆகிய நன்மைகளும் கிடைக்கும். ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை - இது 28 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) மற்றும் வி மூவிஸ் & டிவிக்கான (Vi Movies and TV) சந்தாக்களையும் இலவசமாக வழங்கும்.
வோடபோன் ஐடியா நிறுவனமானது புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க அதன் ப்ரீபெய்ட் சலுகைகளை தொடர்ந்து நிர்வகித்து, தனிப்பயனாக்கி வருகிறது. அனைவருக்கும் ஏதாவது இருப்பதை உறுதி செய்வதற்காக, அனைத்து விலை வரம்புகளிலும், தொலைத்தொடர்பு வட்டாரங்களிலும் ப்ரீபெய்டு சலுகைகளின் பல்வேறு பட்டியலையும் கொண்டுள்ளது.
வி நிறுவனம் புதிய பயனர்களைச் சேர்த்து, ஏற்கனவே உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதற்கு, ரூ.419 போன்ற ப்ரீபெய்டு திட்டங்கள் மிகவும் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இந்நிறுவனம் அதன் ரூ.340 திட்டத்துடன் வழங்கப்படும் டேட்டா நன்மைகளை அதிகரித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது
28 நாட்கள் என்கிற சர்வீஸ் வேலிடிட்டி உடன் வரும் ரூ.340 திட்டம் இப்போது டெய்லி 1ஜிபி டேட்டாவிற்கு பதிலாக டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இந்த மாற்றம் தற்போது இமாச்சலப் பிரதேச வட்டத்தில் மட்டுமே பிரதிபலிக்கிறது. மற்ற வட்டங்களில் தற்போது வரையிலாக அதே பழைய டேட்டா நன்மையே (டெய்லி 1ஜிபி) அணுக கிடைக்கிறது. இந்த மாற்றம் மற்ற டெலிகாம் சர்க்கிள்களுக்கும் வருமா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.


Click it and Unblock the Notifications








