தமிழ்நாட்டுல முதல் முறை.. மதுரை மண்ணுல் இனிமே Vi ஆட்டம்.. அன்லிமிடெட் 5ஜி இறக்கியாச்சு.. ரூ.299-க்கு வருது!
வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) சேவைகள் தமிழ்நாட்டின் மதுரை நகரில் முதல்முறையாக தொடங்கப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த டெலிகாம் கஸ்டமர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர். ரூ.299 முதல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டம் கிடைக்கிறது. மதுரை மட்டுமல்லாமல், மேலும் 2 நகரங்களில் வோடபோன் ஐடியா 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனமானது, நீண்ட காலதாமதத்துக்கு பிறகு அதனுடைய 5ஜி சேவைகளை முழுவீச்சில் கஸ்டமர்களுக்கு கொடுத்து வருகிறது. பல மாதங்களுக்கு முன்பே மும்பையில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு டெல்லி என்சிஆர், பெங்களூரூ, மைசூரு போன்ற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆனால், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு கிடைக்காமல் இருந்து வந்தது. இங்கு வந்தால் சென்னையிலேயே முதலில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மதுரையில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் தமிழ்நாட்டில் விஐ 5ஜி சேவையை பெறும் முதல் நகராமாக மதுரை உருவெடுத்துள்ளது.
மற்ற நகரங்களில் கிடைப்பதை போலவே இங்கும் ரூ.299 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் முதல் அன்லிமிடெட் 5ஜி சேவை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் சலுகைகளை தெரிந்து கொள்வதற்கு முன்பாக மதுரை மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி சேவை தொடங்கப்பட்ட மற்ற நகரங்களையும் தெரிந்து கொள்ளலாம். விசாகப்பட்டினம் மற்றும் திருமலையில் தொடங்கப்பட்டுள்ளது.
எந்தெந்த நகரங்களில் விஐ 5ஜி சேவை கிடைக்கிறது? மதுரை, விசாகப்பட்டினம் மற்றும் திருமலைக்கு முன்னதாக பல்வேறு நகரங்களில் வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டன. இதில் மும்பை, டெல்லி என்சிஆர், பெங்களூரூ, மைசூரு, நாக்பூர், சண்டிகர், ஜெய்ப்பூர், சோனிபட், பாட்னா, அகமதாபாத், ராஜ்கோட் மற்றும் சூரத் நகரங்கள் இருக்கின்றன.
மேலும், வரோதரா, நாசிக், கோலிக்கோடு, மலப்புரம், மீரட் போன்ற நகரங்களிலும் இப்போது வோடபோன் ஐடியாவின் 5ஜி சேவைகள் கிடைக்கின்றன. மதுரையில் வந்துவிட்டால், அடுத்து சென்னை, கோவை, சேலம் போன்ற நகரங்களில் எதிர்பார்க்கலாம். இப்போது, வோடபோன் ஐடியா 5ஜி திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். ஆரம்ப விலை திட்டத்தில் இருந்து பார்ப்போம்.
வோடபோன் ஐடியா ரூ.299 திட்டத்தில் இருந்து அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கொடுக்கப்படும். இந்த நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லில் 1 ஜிபி டேட்டா திட்டத்தில் 5ஜி சேவை கிடைக்காது.
ஆகவே, வோடபோன் ஐடியா கஸ்டமர்களுக்கு இது கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக விஐ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து வோடபோன் ஐடியா ரூ.340 திட்டம், வோடபோன் ஐடியா ரூ.349 திட்டம் போன்றவை கிடைக்கின்றன.
அதேபோல வோடபோன் ஐடியா ரூ.1,749 திட்டத்தில் 180 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெற்று கொள்ளலாம். 365 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வேண்டுமானால், ரூ.3,499 மதிப்பிலான வோடபோன் ஐடியா திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம். இந்த திட்டங்களில் தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரி எஸ்எம்எஸ்களும் கிடைக்கின்றன.


Click it and Unblock the Notifications








