Home
News

வோடபோன் ஐடியா நிறுவனம் கம்மி விலையில் அறிமுகம் செய்த இரண்டு புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள்.!

வோடபோன் நிறுவனம் ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை அதிக சலுகைகளை வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது வோடபோன் நிறுவனம். தற்போது வோடபோன் ஐடியா நிறுவனம் இரண்டு புதிய திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது

அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் தற்போது ரூ.107 மற்றும் மற்றும் ரூ.111 ப்ரீபெய்ட் திட்டங்களை தான் தான் அறிமுகம் செய்துள்ளது. மேலும்இப்போது வோடபோன் நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் நன்மைகளை சற்று விரிவாகப் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.107 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 200 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரூ.107 மதிப்புள்ள டாக்டைம் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.107 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

 வோடபோன் ஐடியா ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனத்தின் ரூ.111 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 200 எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின்வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தில் ரூ.111 மதிப்புள்ள டாக்டைம் கிடைக்கும். ஆனால் இந்த ரூ.111 ப்ரீபெய்ட் திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மைகள் எதுவும் வழங்கப்படவில்லை.

வோடபோன ஐடியா நிறுவனம் ரூ337

அதேபோல் வோடபோன ஐடியா நிறுவனம் ரூ337 ப்ரீபெய்ட் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது. அதாவது ரூ.337 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 28ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், Vi Movies & TV Classicக்கான இலவச சந்தா உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் இந்த ரூ.337 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 31 நாட்கள் ஆகும். மேலும் ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களைப் பார்ப்போம்.

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது மொத்தம் 25ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தில் டேட்டா தீர்ந்த பிறகு ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கப்படும். குறிப்பாக ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற அழைப்புகள், தினசரி 100 எஸ்எம்எஸ்உள்ளிட்ட நன்மைகளை வழங்குகிறது. இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம். அதேபோல் ஏர்டெல் ரூ.296 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.319 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும். அதாவது இந்த திட்டம் மொத்தமாக 60ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். இதுதவிர ஷா அகாடமி சந்தா, இலவச ஹெலோட்டூன்கள் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ. 100 கேஷ்பேக், அமேசான் பிரைம் வீடியோக்களின் மொபைல் பதிப்பின் 30-நாள் இலவச சோதனை உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த புதிய திட்டம்.

Best Mobiles in India

English summary
Vodafone Idea introduced two low cost prepaid plans: Validity 30 days: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X