ரூ.61 க்கு ரூ.25000 மொபைல் இன்சூரன்ஸ்.. SIM இருந்தா போதும்.. Vodafone Idea புது பிளான்.. ஆடிப்போன மார்க்கெட்!
வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமானது, இந்தியா முழுவதுமாக - ஹேண்ட்செட் லாஸ் இன்சூரன்ஸ் கவரேஜ் (Handset loss insurance coverage) உடன் இணைக்கப்பட்ட புதிய ப்ரீபெய்ட் டேட்டா பேக்குகளை (Prepaid Data Packs) அறிமுகப்படுத்தி உள்ளது.
இதன் மூலம் வோடபோன் ஐடியா நிறுவனமானது ப்ரீபெய்ட் திட்டங்களின் கீழ் கிடைக்கும் "மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில்" (Value added services) முற்றிலும் புதிய சேர்க்கையை கொண்டு வந்து உள்ளது மற்றும் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய "கனெக்டிவிட்டிக்கு" அப்பால் வாடிக்கையாளர் ஈடுபாட்டை வலுப்படுத்தவும் முயற்சிக்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டேட்டா பேக்குகள் ஆனது ஆதித்யா பிர்லா ஹெல்த் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (ABHICL) உடன் இணைந்து வழங்கப்படும் ரூ.25,000 வரையிலான ஹேண்ட்செட் லாஸ் இன்சூரன்ஸ் கவரேஜுடன் டேட்டா அலவன்ஸையும் இணைக்கின்றன. முன்னரே குறிப்பிட்டபடி இந்த டேட்டா பேக்குகள் இந்தியா முழுவதும் கிடைக்கிறது மற்றும் வி ஆப், வலைத்தளம் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களிலும் ரீசார்ஜ் செய்யலாம்.
இந்த திட்டத்தின் கீழ் வி நிறுவனம் மூன்று வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிக விலை கொண்ட பேக்கின் விலை ரூ.251 மற்றும் இது 30 நாட்கள் செல்லுபடியாகும் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதே நேரத்தில் ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் கவர் ஆனது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இரண்டாவது பேக்கின் விலை ரூ.201 ஆகும். இது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் 180 நாட்கள் என்கிற குறுகிய ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் காலத்துடன் வருகிறது. பேஸிக் பேக்கின் விலை ரூ.61 ஆகும். இது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டாவையும், 30 நாட்களுக்கான ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் கவரேஜையும் வழங்கும்
அதாவது மேற்கண்ட 3 பேக்குகளுமே எந்த விதமான சர்வீஸ் வேலிடிட்டி உடனும் வராது. அதாவது பயனர்கள் ஏற்கனவே அவுட்கோயிங் சேவைகளை தொடர ஆக்டிவ் ஆக உள்ள ஒருஅடிப்படை திட்டத்தை கொண்டிருக்க வேண்டும். அதற்கு மேலாகத்தான் ரூ.61 முதல் தொடங்கும் ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் கவரேஜ் டேட்டாபேக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியும்.
வி நிறுவனத்தின் காப்பீட்டு விதிமுறைகளின்படி, பதிவுசெய்யப்பட்ட டிவைஸின் திருட்டு அல்லது இழப்புக்கு ஹேண்ட்செட் இன்சூரன்ஸ் பொருந்தும், இது ABHICL ஆல் மேற்கொள்ளப்படும் தகுதி சோதனைகளுக்கு உட்பட்டது. மேலும் காப்பீடு செய்யப்பட்ட ஹேண்ட்செட் ஆனது வி மொபைல் நம்பரில் பதிவு செய்யப்பட வேண்டும், வாங்கும் நேரத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது.
மேலும் காப்பீட்டாளரின் தகுதி அளவுகோல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். காப்பீட்டை செயல்படுத்த, காப்பீட்டு கூட்டாளரிடமிருந்து எஸ்எம்எஸ் பெற்ற 48 மணி நேரத்திற்குள் வாடிக்கையாளர்கள் பதிவு செயல்முறையை முடிக்க வேண்டும். ஹேண்ட்செடின் விவரங்களின் அடிப்படையில் இறுதி காப்பீட்டு மதிப்பு நிகழ்நேரத்தில் தீர்மானிக்கப்படுகிறது, அதிகபட்ச வரம்பு ரூ. 25,000 ஆகும்.
இந்த இன்சூரன்ஸ் - அலட்சியம் காரணமாக ஏற்படும் இழப்பு, பொது இடங்களில் கவனிக்கப்படாத டிவைஸ்கள், வாடிக்கையாளரின் வீட்டில் ஏற்படும் இழப்புகள், மென்பொருள் அல்லது தரவு இழப்பு, புதுப்பிக்கப்பட்ட அல்லது பயன்படுத்தப்பட்ட டிவைஸ்கள் மற்றும் மோசடி அல்லது முழுமையற்ற ஆவணங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட பல சூழ்நிலைகளை விலக்குகிறது. உரிமைகோரல்கள் ABHICL ஆல் நேரடியாக கையாளப்படுகின்றன, அதாவது வோடபோன் ஐடியா தன்னை ஒரு காப்பீட்டாளராக அல்லாமல் ஒரு இடைநிலையாளராக தன்னை நிலைநிறுத்துகிறது.
இந்த புதிய இன்சூரன்ஸ் பேக்குகள் ஆனது இந்திய தொலைத்தொடர்பு துறையில் வளர்ந்து வரும் போக்கையும் பிரதிபலிக்கின்றன. டெலிகாம் ஆபரேட்டர்கள் காப்பீடு, நிதி பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு பாணி சேவைகளை மொபைல் ரீசார்ஜ்களுடன் அதிகளவில் இணைத்து வருகின்றனர். சந்தாதாரர் இழப்பு மற்றும் ஜியோ, ஏர்டெல் போன்ற போட்டியாளர்களிடம் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் பலவீனமான 5ஜி ஆகியவற்றால் தொடர்ந்து அழுத்தத்தை எதிர்கொள்ளும் வி-க்கு இத்தகைய திட்டங்கள் நெட்வொர்க் செலவுகளை கணிசமாக அதிகரிக்காமல் குறைந்த பயன்பாட்டு அல்லது இரண்டாம் நிலை சிம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள நிச்சயம் உதவும்.


Click it and Unblock the Notifications








