Home
News

வோடபோன் ஐடியா அட்டகாச ரீசார்ஜ் திட்டம்: வெறும் ரூ.59, ரூ.65 விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி

விஐ நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்களை கவர பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக வோடபோன் ஐடியா தங்களது பிராண்டை விஐ என்று அறிமுகப்படுத்திய நாளில் இருந்து ஏணைய திட்டங்களை வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அறிமுகம் செய்து வருகின்றன.

வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ரீசார்ஜ் திட்டங்கள்

வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் ரீசார்ஜ் திட்டங்கள்

விஐ நிறுவனம் தொடர்ந்து புதுப்புது திட்டங்களை பல்வேறு சலுகைகளோடு அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ரூ.100-க்கு கீழ் திட்டங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவரும் முயற்சியில் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அதன்படி தற்போது ரூ.100-க்கு கீழ் இரண்டு திட்டங்களை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

ரூ.100-க்கு கீழ் இரண்டு திட்டங்கள்

ரூ.100-க்கு கீழ் இரண்டு திட்டங்கள்

விஐ தற்போது ரூ.100-க்கு கீழ் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு திட்டங்களும் மகாராஷ்டிரா மற்றும் கோவா பகுதியில் மட்டும் கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது. விரைவில் இந்தியாவில் பிற பகுதிகளிலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

 ரூ.59 மற்றும் ரூ.65 விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

ரூ.59 மற்றும் ரூ.65 விலையில் ரீசார்ஜ் திட்டங்கள்

விஐ அறிமுகம் செய்த இரண்டு திட்டங்களும் ரூ.59 மற்றும் ரூ.65 என்ற விலையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டங்களானது அதிக நாட்கள் வேலிடிட்டி மற்றும் குறிப்பிட்ட குரல் அழைப்பு நன்மைகளுடன் கிடைக்கிறது. இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.59 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ அறிமுகம் செய்த ரூ.59 ப்ரீபெய்ட் திட்டமானது மொத்தம் 30 நிமிட குரல் அழைப்புகளை வழங்குகிறது. இந்த 30 நிமிட குரல் அழைப்புகளை உள்ளூர், தேசியம் மற்றும் ரோமிங் கால்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டமானது மொத்தம் 28 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் வேறு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை.

ரூ.65 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.65 ப்ரீபெய்ட் திட்டம்

அதேபோல் விஐ அறிமுகம் செய்த ரூ.65 ப்ரீபெய்ட் திட்டத்தில் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பி அதிவேக இணையத்தை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் ரூ.52 மதிப்புள்ள குரல் அழைப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. விஐ சமீபத்தில் சென்னையில் ரூ.25 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது கவனிக்கத்தக்க ஒனஅறு. இந்த திட்டமானது 10 நிமிட உள்ளூர் அழைப்புகளுடன் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டதாகும்.

ரூ.39 விலையில் ரீசார்ஜ் திட்டம்

ரூ.39 விலையில் ரீசார்ஜ் திட்டம்

விஐ ரூ.100-க்கு கீழ் வழங்கும் விஐ திட்டங்கள் குறித்து பார்க்கையில், ரூ.39 என்ற விலையில் விஐ, 100 எம்பி டேட்டா மற்றும் ரூ.30 மதிப்புள்ள குரலழைப்பு சேவைகளை 14 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல் ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தில் 300 எம்பி டேட்டா ரூ38 மதிப்புள்ள குரலழைப்பு சேவைகளை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.79 ப்ரீபெய்ட் திட்டம்

விஐ வழங்கும் ரூ.79 ப்ரீபெய்ட் திட்டத்தில் 400 எம்பி டேட்டா, ரூ.64 மதிப்புள்ள குரலழைப்பு சேவைகளை 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. அதேபோல் ரூ.95 ப்ரீபெய்ட் திட்டத்தில் 200 எம்பி இணைய சேவை மற்றும் ரூ.74 மதிப்புள்ள குரலழைப்பு சேவையை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Vodafone idea Introduced Rs.59 and Rs.65 Recharge Plans with 28 days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X