Home
News

இப்படியாச்சும் ஒரு ஆபர் கொடுத்தீங்களே சந்தோஷம்.! வோடபோன் ஐடியா பயனர்கள் கவனத்திற்கு.!

பயனர்களுக்கு இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்து சலுகைகளை வழங்கியுள்ளது வோடபோன் ஐடியா. அதாவது சமீபத்தில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் விதமாக புதிய திட்டம் மற்றும் சலுகைகளை வழங்கியது. 2023 புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஜியோ நிறுவனம் ரூ.2023 விலையில் புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய திட்டத்துடன் ரூ.2999 திட்டத்தின் வேலிடிட்டியை கூட நீட்டித்துள்ளது ஜியோ நிறுவனம்.

ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2023 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 252 நாட்கள் ஆகும். இந்த புதிய திட்டத்தில் மொத்தமாக 630ஜிபி டேட்டா நன்மை உள்ளது. பின்பு தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. இதுதவிர ஜியோவின் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோ செக்யுரிட்டி போன்ற செயலிகளுக்கான சந்தாவும் வழங்கப்படுகின்றன.

ஜியோ ரூ.2999 திட்டம்

ஜியோ ரூ.2999 திட்டம்

ஜியோ ரூ.2999 ப்ரீபெய்ட் திட்டத்தில் 23 நாட்கள் வேலிடிட்டி-ஐ நீட்டித்து இருக்கிறது ஜியோ நிறுவனம். தற்போது இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 388 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2.5ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள், ஜியோ செயலிகளுக்கான சந்தாவும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் நிறுவனம்

ஏர்டெல் நிறுவனம்

அதேபோல் ஏர்டெல் நிறுவனமும் சமீபத்தில் தனது திட்டங்களில் சில சலுகைகளை வழங்கியது. அதாவது ஏர்டெல் நிறுவனம் கடந்த மாதம் ரூ.3359 மற்றும் ரூ.499 ப்ரீபெய்ட திட்டங்களில் மட்டுமே டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெற முடியும் என்று கூறி இருந்தது. இந்நிலையில் மீண்டும் கம்மி விலை ப்ரீபெய்ட் திட்டங்களில் இந்த டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம். அதாவது ஏர்டெல் நிறுவனம் ரூ.399 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்களில் மீண்டும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியுள்ளது.

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, FASTag-ல் ரூ.100 கேஷ்பேக் மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ஆனது 3 மாதங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளும் கிடைக்கிறது. இதுதவிர Wynk மியூசிக், இலவச Hellotunes, ரிவார்ட்ஸ்மினி சந்தா மற்றும் Apollo 24|7 Circle போன்ற கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது. குறிப்பாக ஏர்டெல் ரூ.839 ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.

எனவே ஏர்டெல் பயனர்கள் இப்போது நான்கு ப்ரபெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவைப் பெறலாம். அதாவது ரூ.3359, ரூ.839, ரூ.499 மற்றும் ரூ.399 ப்ரீகெய்ட் திட்டங்களில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது.

இரண்டு திட்டங்கள்

இரண்டு திட்டங்கள்

இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனமும் கம்மி விலையில் இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்து குறிப்பிட்ட சில சலுகைகளை வழங்கியுள்ளது. அதாவது வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.25 மற்றும் ரூ.55 டேட்டா வவுச்சர்களை அறிமுகம் செய்துள்ளது. பின்பு இந்த இரண்டு திட்டங்களிலும் விளம்பரமில்லா இசை அணுகலை வழங்குகிறது வோடபோன் ஐடியா. அதாவது பயனர்கள் இந்த திட்டங்களைத் தேர்வு செய்வதன் மூலம் ad-free music அணுகலைப் பெறமுடியும்.

ஹங்காமா மியூசிக்

ஹங்காமா மியூசிக்

குறிப்பாக இந்த திட்டங்களுக்காக ஹங்காமா மியூசிக் உடன் வோடபோன் ஐடியா கூட்டு சேர்ந்துள்ளது . பின்பு இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் முன்பு நீங்கள் வோடபோன் ஐடியாவின் ஏதாவது அடிப்படைத் திட்டத்தை வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது வெறும் டேட்டா வவுச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

பயனுள்ள வகையில் இருக்கும்..

பயனுள்ள வகையில் இருக்கும்..

வோடபோன் ஐடியாவின் ரூ.25 திட்டம் ஆனது 1.1ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி ஒரு நாள் மட்டுமே. அதேபோல் ரூ.55 திட்டம் ஆனது 3.3ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 7 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea introduced Rs 25 and Rs 55 data vouchers and offered ad-free music: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X